27ம் தேதி மோதப் போகும் "இடியும், மின்னலும்" .. யாருடைய "கால்களை" அலங்கரிக்கும் கோபா அமெரிக்கா?
சிகாகோ: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் கிளைமேக்ஸ் வந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும், சிலியும் மோதவுள்ளன. இருவரில் யாருக்குக் கிடைக்கப் போகிறது 100வது ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பை என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க நாடுகளின் ரசிகர்கள் உள்ளனர்.
முன்னதாக இன்று நடந்த 2வது அரை இறுதிப் போட்டியில் சிலி அணி கொலம்பியாவை 2 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டி புயல் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அரை இறுதிப் போட்டியில் ஏற்கனவே அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது. ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பு
ரசிகர்களிடையே இந்த இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

100வது ஆண்டு கோப்பை
தற்போது கோபா அமெரிக்கா கோப்பைத் தொடருக்கு 100 வயதாகும். எனவே இந்த நூற்றாண்டுக் கோப்பையை வெல்லப் போகும் பெருமையாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த முறையும் இதே ஜோடிதான்
கடந்த முறை சிலியில் நடந்த கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியிலும் இதே இரு அணிகள்தான். அதில். பெனால்டி ஷூட் அவுட்டில் சிலி வெற்றி பெற்றது.

அசத்துமா அர்ஜென்டினா
அர்ஜென்டினா அணி தனது அரை இறுதிப் போட்டியில் அமெரிக்காவை 4-0 என்ற கணக்கில் புரட்டி எடுத்து விரட்டியடித்தது. தற்போது நல்ல பார்மில் உள்ளார் லியோனல் மெஸ்ஸி.

மெஸ்ஸி மாஜிக்
மெஸ்ஸி மாஜிக்கும், பிற வீரர்களின் ஆட்டமும் இணைந்து அர்ஜென்டினாவை கோப்பையைத் தட்டிச் செல்ல வைக்கும் என்ற நம்பிக்கையில் அர்ஜென்டினா ரசிகர்கள் உள்ளனர்.

3வது இடம் யாருக்கு?
3வது இடத்திற்கான போட்டியில், தொடரை நடத்தும் அமெரிக்காவும், கொலம்பியாவும் சனிக்கிழமை மோதவுள்ளன. இதில் அமெரிக்கா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அந்த நாட்டுப ரசிகர்கள் உள்ளனர்..


Click it and Unblock the Notifications