Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேய் சிட்டப் செய்ய விடுங்கடா அப்பாவை.. கதற விட்ட குழந்தைகள்.. தடுமாறிய ரொனால்டோ

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டு கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனோல்டா தனது பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக செய்யும் ஒவ்வொரு செயலும் சிரிப்பை வரவைப்பதாக உள்ளது.

கொரோனா காரணமாக வீட்டோடு முடங்கிப் போயுள்ளார் ரொனால்டோ. அவருக்கே கொரோனா வந்திருப்பதாக ஒரு வதந்தி இடையில் பரவியது. ஆனால் மனிதர் நல்லாவே இருக்கார். அத்தோடு தனது குடும்பத்தாரோடு சூப்பராக பொழுதைப் போக்கி வருகிறார்.

வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் நிறைய உடற்பயிற்சி செய்கிறார் ரொனால்டோ. அதுவும் அவரது குட்டிக் குழந்தைகள் வேறு இடை இடையே வந்து விடுகிறார்கள். அவர்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

வீடியோ வெளியிட்ட ரொனால்டோ

வீடியோ வெளியிட்ட ரொனால்டோ

தற்போது அவர் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும்போது அவரது குழந்தைகள் உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கலைத்து விடும் காமெடிக் காட்சிகள் நிரம்பியுள்ளன. அவர்களை எப்படி சமாளிக்கிறார் ரொனால்டோ என்பதுதான் இந்த வீடியோவின் நீதி. படு ஜாலியாக இருக்கிறது இதைப் பார்க்கவே.

குழந்தைகளுடன் ரொனால்டோ

குழந்தைகளுடன் ரொனால்டோ

மடீராவில் உள்ளது ரொனால்டோவின் வீடு. அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் ரொனால்டோ. அவர் உடற்பயிற்சி செய்யும்போது அவரது இரு குழந்தைகள் உள்ளே புகுந்து அவரை தள்ளி விடுகிறார்கள். தலையைப் பிடித்து தள்ளி விடுகிறார்கள். அவர் மீது ஏறி விளையாடப் பார்க்கிறார்கள். இதனால் அவரால் சிட் அப் செய்ய முடியவில்லை.

சிட்டப் செய்ய விடாமல் சேட்டை

அடேய்களா சிட்டப் செய்ய விடுங்கடா என்று சிரித்தபடி அவர்களை சமாளிக்கும் வேலையில் இறங்குகிறார். மகளை கையால் பிடித்து தூக்கி எக்சர்ஸைச் செய்கிறார். பிறகு மகனையும் அதேபோல தூக்கி விளையாடுகிறார். அவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் போல. இந்த வீடியோவுடன், குழந்தைங்களா அப்பாவை வேலை பார்க்க விடுங்கடா என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ரொனால்டோ.

ரொனால்டோவுக்கு 4 குழந்தைகள்

ரொனால்டோவுக்கு 4 குழந்தைகள்

ரொனால்டோவுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். அதில் மூத்த குழந்தையான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியருக்கு 9 வயதாகிறது. பிறகு ஈவா மரியா டாஸ் சான்டோஸ் என்று ஒரு மகள். அதன் பிறகு இரட்டையர்களான ஆலனா மார்ட்டினா டாஸ் சான்டோஸ் ஏவியரோ மற்றும் மாட்டியோ ரொனால்டோ. இவர்களுக்கு 2 வயதாகிறது.

காதலியுடன் உடற்பயிற்சி

காதலியுடன் உடற்பயிற்சி

இதேபோல சமீபத்தில் தனது வீட்டில் தனது பார்ட்னருடன் இணைந்து உடற்பயிற்சி செய்வது போல ஒரு வீடியோவை போட்டிருந்தார் ரொனால்டோ. அதுவும் வைரலானது. எப்படியோ ரொனால்டோ ஜாலியாக இருக்கிறார், உடற்பயிற்சி செய்கிறார், குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். அவரது உடல் நலம் குன்றிய தாயாரையும் கருத்தாக பார்த்துக் கொள்கிறார்.

Story first published: Thursday, April 16, 2020, 18:47 [IST]
Other articles published on Apr 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+