Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உனக்கென்ன பைத்தியமா? அத்துமீறிய ரசிகர்.. கடுப்பான ரொனால்டோ!

கால்பந்தாட்ட சாம்பியன் லீக் தொடரின் ஜூவன்டஸ் மற்றும் பேயர் லெவர்கூசன் அணிக்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரசிகர் ஒருவர் கடுப்பேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போட்டி நிறைவை அடுத்து கோல் அடித்த ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த அந்த ரசிகர், ரொனால்டோவின் கழுத்தை பிடித்து இழுத்து காயமேற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பயங்கர கோபத்துடன் கத்திய ரொனால்டோவை அணியின் கியான்லூகி பப்பன் சமாதானப்படுத்தினார்.

 கோல் அடித்த ரொனால்டோ

கோல் அடித்த ரொனால்டோ

கால்பந்தாட்ட சாம்பியன் லீக் தொடரில் ஜூவன்டஸ் மற்றும் பேயர் லெவர்கூசன் அணிகள் மோதிய நிலையில், தன்னுடைய அணிக்காக ரொனால்டோ கோல் அடித்தார். இதையடுத்து அவரது ஜூவன்டஸ் அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

 செல்பி எடுக்க ஆர்வம்

செல்பி எடுக்க ஆர்வம்

இந்நிலையில் பாதுகாவலர்களை மீறி, மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க வேகமாக முயன்று அவரது கழுத்தை பிடித்ததில் ரொனால்டோவிற்கு காயம் ஏற்பட்டது.

"உனக்கென்ன பைத்தியமா?"

இதனால் கடுப்பான ரொனால்டோ, மிகுந்த ஆத்திரத்துடன் அவரை பார்த்து உனக்கென்ன பைத்தியமா என்று கூக்குரலிட்டார். இதையடுத்து மைதானத்தின் காவலர்கள், அந்த ரசிகரை இழுத்து சென்று வெளியேற்றினர்.

 மீண்டும் கோபமடைந்த ரொனால்டோ

மீண்டும் கோபமடைந்த ரொனால்டோ

இதையடுத்து மற்றொரு ரசிகரும் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரொனால்டோவை கட்டியணைக்க முயற்சித்தார். இந்த செயலாலும் மீண்டும் ரொனால்டோ கடுப்பானார்.

கழுத்தில் காயம்

இதையடுத்து தன்னுடைய கழுத்தை பிடித்துக் கொண்டிருந்த ரொனால்டோவை சக வீரர் கியான்லூகி பப்பன் அமைதிப் படுத்தியதை அடுத்து அவர் சமாதானமடைந்தார்.

Story first published: Friday, December 13, 2019, 16:17 [IST]
Other articles published on Dec 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+