Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்!

Recommended Video

Watch Video : Cristiano Ronaldo Cries in Interview Talking About his Dad

போர்ச்சுகல்: நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்திய பேட்டி ஒன்றில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்பொழுது வைரலாக பரவி கொண்டு வருகிறது.

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் சிரித்தால் சிரிக்கவும், அவர் அழுதால் சேர்ந்து கண்ணீர் விடவும் கோடி பேர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் பேட்டி ஒன்றில் கண்ணீர்விட்டு அழுதார்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

ஆங்கில பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கன், கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் சமீபத்தில் பேட்டி ஒன்றை எடுத்தார் . அந்த பேட்டியில் ரொனால்டோவின் தந்தை ஜோஸ் டினிஸ் அவிரோவைப் பற்றி பேசும் பொழுது திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார்.

என்ன உருக்கம்

என்ன உருக்கம்

மோர்கன், ரொனால்டோவின் தந்தை பேசிய வீடியோ ஒன்றை அவரிடம் போட்டு காட்டினார். அந்த வீடியோவில் அவர் தனது மகனின் சாதனைகள் காரணமாக எவ்வளவு பெருமைப்படுகிறார் என்பதைப் பற்றி பேசினார். அந்த வீடியோ பார்க்கவே உருக்கமாக இருந்தது.

எத்தனை வருடம்

எத்தனை வருடம்

14 வருடங்களுக்கு முன்பு மறைந்த தன்னுடைய தந்தை பேசிய வீடியோவை பார்த்த ரொனால்டோ "இந்த வீடியோவை தான் பார்த்ததில்லை, இவை உணர்ச்சிபூர்வமான தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள்" என்று கூறிவிட்டு ரொனால்டோ அழுதார். நான் விருதுகளைப் பெறுவதை, என் அம்மா, சகோதரர்கள், ஏன் என்னுடைய மூத்த மகன் கூட பார்த்ததுண்டு. ஆனால் எனது தந்தை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை, என்று கூறினார்.

போட்டி

மேலும் அதே பேட்டியில் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியுடனான தனது நீண்டகால போட்டி குறித்து கூறினார். அதில், அந்த போட்டி என்னை ஒரு சிறந்த வீரராக ஆக்கியுள்ளது என்றார். அர்ஜென்டினாவின் சிறந்த வீரர்களுடன் "ஆரோக்கியமான" போட்டியை அவர் அனுபவித்து வருவதாகவும் ரொனால்டோ ஒப்புக் கொண்டார்.

இதற்கு முன்

இதற்கு முன்

இந்த மாத தொடக்கத்தில் நடந்த யுஇஎஃப்ஏ விருது வழங்கும் விழாவின் போது கூட, ​​ரொனால்டோ அர்ஜென்டினாவின் மெஸ்ஸியைப் பாராட்டினார், மேலும் அர்ஜென்டினா வீரர்களுடன் இரவு உணவிற்கு தயாராக உள்ளதாக அப்பொழுது தெரிவித்தார்.

அவர்தான்

அவர்தான்

மெஸ்ஸியை பற்றி அவர் மேலும் கூறும் போது, "மெஸ்ஸி என்னை ஒரு சிறந்த வீரராகவும், நேர்மாறாகவும் ஆக்கியுள்ளார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, எனக்கும் அவருக்கும் ஒரு சிறந்த தொழில்முறை உறவு உள்ளது, ஏனென்றால் நாங்கள் 15 ஆண்டுகளாக அதே தருணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்'' என்றும் கூறினார்.

Story first published: Tuesday, September 17, 2019, 15:53 [IST]
Other articles published on Sep 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+