Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம கோல்! வானில் பறந்து.. தலையால் தட்டி.. நிஞ்சா போல தரையிறங்கிய ரொனால்டோ.. தெறிக்கவிடும் வீடியோ!

யுவெண்டஸ் : கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் ஒன்று கால்பந்து ரசிகர்கள் இடையே பரபரப்பாக இணையத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் நடந்த 2019 ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கும் விழாவில் மெஸ்ஸிக்கு சென்றது முதல் மெஸ்ஸி - ரொனால்டோ ரசிகர்கள் இடையே ஆன யுத்தம் தொடங்கியது.

நம்ப முடியாத கோல்

நம்ப முடியாத கோல்

இந்த நிலையில், வெளியாகி உள்ள இந்த நம்ப முடியாத கோல் ரொனால்டோ ரசிகர்கள் இடையேயும், பொதுவான கால்பந்து ரசிகர்கள் இடையேயும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

அந்த போட்டி

அந்த போட்டி

யுவெண்டஸ் அணிக்காக ஆடி வரும் ரொனால்டோ, சீரி ஏ தொடரில் சாம்ப்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான நேரத்தில் வானில் பறந்து, தலையால் தட்டி ஒரு கோல் அடித்தார்.

தலையால் அடித்த கோல்

முதலில் எதிரணி வீரரை விட உயரே எகிறி குதிக்கும் ரொனால்டோ, அடுத்து தலையால் பந்தை சரியாக கோல் போஸ்ட்டின் மேற்புறம் தட்டி விடுகிறார். சிறப்பான கோலாக அது மாறியது.

நிஞ்சாவாக மாறினார்

அடுத்து அத்தனை உயரத்தில் இருந்து கீழே குதிக்கும் போது நிச்சயம் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு இருந்தது. எனினும், ஒற்றைக் காலில் நிஞ்சா போல கீழே இறங்கிய ரொனால்டோ எந்த காயமும் இன்றி தப்பினார்.

மெஸ்ஸி கூட அடிக்க முடியாது

மெஸ்ஸி கூட இப்படி கோல் அடிக்க முடியாது என ரொனால்டோ ரசிகர்கள் இந்த கோலை கொண்டாடி வருகிறார்கள். இணையத்தில் பரவும் வீடியோ மூலம், மெஸ்ஸி ரசிகர்களை வம்பிழுக்கவும் தவறவில்லை.

Story first published: Thursday, December 19, 2019, 21:53 [IST]
Other articles published on Dec 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+