For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்சி 'மிஸ்' செய்ததை 'மேட்ச்' செய்த ரொனால்டோ!

By Veera Kumar

லண்டன்: கால்பந்து உலகின் தற்போதைய தலைமுறை ஹீரோக்கள் என்றால் அது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சியும், போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான்.

இவ்விருவரில் யார் பெஸ்ட் என்ற கேள்வி, பெஸ்ட் பேட்ஸ்மேன், விராட் கோஹ்லியா, டிவில்லியர்சா என்ற கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி போல முடிவில்லாமல் தொடரக்கூடியது.

இவ்விரு கால்பந்து வீரர்களுக்கும் தங்களுக்கே உரித்தான பிரத்யேக நுணுக்கங்களை கையாண்டாலும், இரு வீரர்களின் ரசிகர்களும், அவர்களை ஒப்பிட்டு பார்ப்பதில் ஆனந்தம் அடைவர்.

பூரிப்பு

பூரிப்பு

இந்நிலையில்தான், கடந்த சில தினங்களில் நடைபெற்ற இரு முக்கியமான போட்டிகள், ரொனால்டோ ரசிகர்களுக்கு பூரிப்பையும், மெஸ்சி ரசிகர்களுக்கு கடுப்பையும் அளித்துள்ளது.

பெனால்டி ஷூட்

பெனால்டி ஷூட்

இந்த கால்பந்து தொடரில் சிலி மற்றும் மெஸ்சி தலைமையிலான, அர்ஜென்டினா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் இரு அணிகளும் குறிப்பிட்ட காலத்தில் கோல் அடிக்காத நிலையில், பெனால்டி ஷூட்டுக்கு ஆட்டம் நகர்ந்தது.

மெஸ்சி அதிர்ச்சி

மெஸ்சி அதிர்ச்சி

இந்த கால்பந்து தொடரில் சிலி மற்றும் மெஸ்சி தலைமையிலான, அர்ஜென்டினா அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் இரு அணிகளும் குறிப்பிட்ட காலத்தில் கோல் அடிக்காத நிலையில், பெனால்டி ஷூட்டுக்கு ஆட்டம் நகர்ந்தது.

கால் பந்தாட்டத்திலிருந்தே ஓய்வு

கால் பந்தாட்டத்திலிருந்தே ஓய்வு

முக்கிய கட்டத்தில் லியோனல் மெஸ்சி கோல் அடிக்க தவறியது, தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் கால்பந்தாட்டங்களை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது போன்றவை மெஸ்சியின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ரொனால்டோ அணி

ரொனால்டோ அணி

அதேநேரம், நேற்று நேற்று யூரோ கோப்பை கால்பந்தாட்டத் தொடரில், பிரான்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி.

கூடுதல் நேரம்

கூடுதல் நேரம்

ஐரோப்பிய யூனியன் நாடுகள் மட்டுமே பங்கேற்கும் யூரோ கோப்பை மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட தொடராகும். இந்த தொடரின் இறுதி போட்டியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பதால் கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் சென்றது.

வெளியேறினாலும் வெற்றி

வெளியேறினாலும் வெற்றி

கூடுதல் நேரத்தில், போர்ச்சுக்கல் வீரர் ஆன்டனியோ ஈடர் ஒரு கோல் அடிக்க, பிரான்ஸ் பதிலுக்கு கோல் அடிக்க முடியாமல் போக.. இறுதியில் கோப்பையை கைப்பற்றியது போர்ச்சுக்கல். ஆட்டம் தொடங்கிய 25வது நிமிடத்திலேயே ரொனால்டோ காயத்தால் வெளியேறினாலும், கோப்பையை வென்றதைத்தான் ரசிகர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

ரொனால்டோ ரசிகர்கள் குஷி

ரொனால்டோ ரசிகர்கள் குஷி

அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற இரு பெரும் கால்பந்தாட்ட தொடரில் மெஸ்சி அணி கோப்பையை கைப்பற்றவில்லை. ரொனால்டோ அணி முதல்முறையாக யூரோ தொடரை வென்று அசத்தியுள்ளது. அதுவும் பலம் வாய்ந்த பிரான்சை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதன் மூலம். இப்போதைய நிலையில், ரொனால்டோ ரசிகர்கள் காட்டி மழைதான்.

Story first published: Monday, July 11, 2016, 11:57 [IST]
Other articles published on Jul 11, 2016
English summary
Cristiano Ronaldo has succeeded where Lionel Messi failed, he has won a major trophy at international level.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X