இந்த நிமிஷத்தில் இவர்தான் பெஸ்ட்.. அடித்துச் சொல்லும் பீலே
ரியோ டி ஜெனீரோ: உலக கால்பந்து அரங்கில் இந்த நிமிடத்தில் சிறந்த வீரர் யார் என்றால் அது நிச்சயமாக போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கூறியுள்ளார்.
இப்போதைக்கு அவர்தான் நம்பர் ஒன் வீரர். அதேபோல அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியும் சிறந்த வீரர் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும் உலக அளவில் இரண்டு மிகச் சிறந்த வீரர்கள் மட்டுமே இருப்பது சற்று வருத்தத்திற்குரியதுதான் என்றும் பீலே கூறியுள்ளார்.
டெய்லிமெயில் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பீலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

அருமையான ரொனால்டோ
இப்போதைய நிலையில் ரொனால்டோதான் மிகச் சிறந்த வீரர். நம்பர் ஒன் வீரர். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ஒரு நாட்டின் அணியைத் தேர்வு செய்வதாக இருந்தால் நிச்சயம் முதலில் ரொனால்டோவைத்தான் தேர்வு செய்வேன்.

மெஸ்ஸியும் பெஸ்ட்தான்
லியோனல் மெஸ்ஸியும் இருக்கிறார். அவரும் சிறந்த வீரர்தான். ஆனால் உலக அளவில் இந்த நிமிடத்தில் யார் பெஸ்ட் என்றால் இவர்களை மட்டுமே கை காட்ட வேண்டியுள்ளது. அது வருத்தத்திற்குரியது.

யாரும் உருவாகவில்லை
கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்களைத் தவிர வேறு யாரும் உருவாகவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. கவலை தருகிறது. அதிக அளவிலான சூப்பர் ஸ்டார்கள் இன்று இல்லை.

சூப்பர் ஸ்டார்கள் இல்லையே
ஜார்ஜ் பெஸ்ட், பாபி மூர், ஜெர்ஜிங்கோ, பாபி சார்ல்டன், பீலே, ஜிகோ, பேக்கன்பேயர், கிரிப், ஜிடேன், மாரடோனா என அப்போது அதிக அளவிலான சூப்பர் ஸ்டார்களை கால்பந்து உலகம் கண்டது. இன்று அந்த நிலை இல்லை. இது கால்பந்துக்கு நல்லதல்ல.


Click it and Unblock the Notifications