For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கெத்து காட்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

2017ம் வருடத்தின் சிறந்த கால்பந்து பிளேயருக்கான விருது பெறுகிறார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

By Shyamsundar

லண்டன்: கால்பந்து போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வெவ்வேறு விதமான விருதுகளை எப்போதும் பிஃபா வழங்கும். இதில் சிறந்த கால் பந்து பிளேயர்களுக்கான விருதுகளையும் வருடாவருடம் பிஃபா வழங்குவது வழக்கம்.

2017ம் வருடத்தின் சிறந்த கால்பந்து பிளேயருக்கான விருது பெறுகிறார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த விருது லண்டனில் நடக்கும் விழாவில் அவருக்கு வழங்கப்பட்டது.

இவர் இதற்கு முன்பே பிஃபா வழங்கியுள்ள வேறுபல விருதுகளை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஃபா வழங்கும் இந்த விருதை 5 வது முறையாக இவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அனைத்திலும் நல்ல பர்பார்மன்ஸ்

அனைத்திலும் நல்ல பர்பார்மன்ஸ்

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இந்த வருடம் கால்பந்து வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான வருடம் ஆகும். களம் கண்ட அனைத்து போட்டிகளிலும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் ரியல் மாட்ரிட் கிளப்பிற்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடி மொத்தம் 44 கோல்களை அடித்துள்ளார். வெறும் 48 போட்டிகளில் அவர் இத்தனை கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஃபாவின் தங்க கால்பந்து விருது

பிஃபாவின் தங்க கால்பந்து விருது

சில வருடங்களுக்கு முன்பு வரை பிரான்ஸ் நாடு கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு "தங்க கால்பந்து" விருது வழங்கி சிறப்பித்து வந்தது. அதன்பின் சில வருடங்களுக்கு முன் பிஃபா குழுவுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக தங்க கால்பந்து விருதானது பிஃபா வழங்கும் சிறந்து பிளேயருக்கான விருதுடன் சேர்ந்து வழங்கப்பட்டது. கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருது ஆகும் இது. ஒரு வருடத்தில் சிறந்து விளங்கும் பிளேயருக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்பதால் இதை பெறுவதற்கு கால்பந்து உலகமே தவம் இருக்கிறது.

 ரொனால்டோவுக்கு சிறந்த பிளேயர் விருது

ரொனால்டோவுக்கு சிறந்த பிளேயர் விருது

இந்த நிலையில் இந்த 2017ம் வருடத்தின் சிறந்த கால்பந்து பிளேயருக்கான விருது பெறுகிறார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அதிக கோல்கள் அடித்தது, தொடர்ச்சியாக சிறந்த வளர்ச்சியை காட்டி வருவது என பல காரணங்களால் அவர் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஃபா வழங்கும் இந்த விருதை 5 வது முறையாக இவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் நேற்று நடந்த விழாவில் அவர் இந்த விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நன்றி தெரிவித்த ரொனால்டோ

நன்றி தெரிவித்த ரொனால்டோ

இந்த நிலையில் இந்த விருதுக்கு ரொனால்டோவை தேர்ந்தெடுத்து அவருக்கு விருது கிடைக்க செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது "இந்த விருதுக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. என்னைப் போலவே கால்பந்து உலகில் சிறப்பான வீரர்கள் பலர் இருக்கின்றனர். நெய்மர், மெஸ்ஸி ஆகியோரும் இந்த இடத்தில் நிற்க தகுதி வாய்ந்தவர்கள் தான். என்னுடைய பின்புலமாக இருக்கும் அனைவருக்கும் இங்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Story first published: Tuesday, October 24, 2017, 16:12 [IST]
Other articles published on Oct 24, 2017
English summary
Cristiano Ronaldo's has won the 2017 Best FIFA men's player. He got this award for the fifth time in his football history.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+