Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயிறு முட்ட பீர் குடித்தேன், நெடுந்தூரம் ஓடினேன்.. என் மகனைக் கொல்ல முயன்றேன்- ரொனால்டோவின் தாயார்!

லிஸ்பன்: உலக கால்பந்து சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் இருந்தபோதே அழிக்க முயன்றதாக அவரது தாயார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருவில் இருந்த ரொனால்டோவை பெற்றெடுக்க விரும்பாமல் அவர் பல வழிகளையும் கையாண்டுள்ளார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை. உறுதியாக கருக் கொண்டு விட்ட ரொனால்டோ இன்று அவரது தாயாருக்கு மிகவும் பிடித்த செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார்.

டாக்டரிடம் அபார்ஷனுக்காக போனபோது அவர் மறுக்கவே நிறைய பீர் குடித்தும், சாலையில் நெடுந்தூரம் ஓடியும் கருவைக் கலைக்க முயன்றாராம் ரொனால்டோவின் தாயார் டோலெரஸ் அவிரோ. ஆனால் எதுவும் நடக்காமல் போய் விட்டது.

சுயசரிதையில்

சுயசரிதையில்

டோலெரஸ் மதர் கரேஜ் என்ற பெயரில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார். அதில்தான் இதுகுறித்துக் கூறியுள்ளார்.

அபார்ஷனுக்கு மறுத்த டாக்டர்

அபார்ஷனுக்கு மறுத்த டாக்டர்

"நான் அபார்ஷன் செய்யுமாறு டாக்டர்களிடம் கேட்டேன். ஆனால் யாரும் தயாராக இல்லை. ஆனால் எனக்கு கரு பிடிக்கவில்லை.

பீர் குடித்தேன் - ஓடினேன்

பீர் குடித்தேன் - ஓடினேன்

இதனால் இயற்கையாகவே கரு கலைய என்ன வழி என்று யோசித்தேன். இதையடுத்து நிறைய பீர் குடித்தேன். நீண்ட தூரம் வயிறு வலிக்க வலிக்க ஓடினேன். அப்படியும் கரு கலையவில்லை.

கிண்டலடித்த ரொனால்டோ

கிண்டலடித்த ரொனால்டோ

இந்த ரகசியம் எனது மகனுக்கும் தெரியும். நானேதான் சொல்லியிருந்தேன். இதை வைத்து இன்னும் கூட என்னை அவன் கிண்டலடிப்பான்.

பாத்தியா நான்தான் உன்னைப் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்

அவன் என்னிடம் கூறுவான்.. அம்மா பார்த்தியா, நீ என்னை அழிக்கப் பார்த்தாய். ஆனால் நான்தான் இப்போது நமது வீட்டையும், உன்னையும் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னைக் கிண்டலடிப்பான் என்றார் அவர்.

குடித்தே அழிந்த தந்தை

குடித்தே அழிந்த தந்தை

ரொனால்டோவின் தந்தை டினிஸ் குடிப் பழக்கம் கொண்டவர். குடியால் அவரது ஈரல் கெட்டுப் போய் மரணமடைந்தார் அவர்.

Story first published: Saturday, July 19, 2014, 16:00 [IST]
Other articles published on Jul 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+