Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை யாருக்கு.... முதல் முறையாக பைனலில் குரேஷியா.... பிரான்ஸை சந்திக்கிறது!

Recommended Video

முதல் முறையாக பைனலில் குரேஷியா...பிரான்ஸை சந்திக்கிறது!- வீடியோ

மாஸ்கோ: 2018 ஃபிபா உலகக் கோப்பை பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா சந்திக்க உள்ளன. பிரான்ஸ் மூன்றாவது முறையாகவும், குரேஷியா முதல் முறையாகவும் பைனல் நுழைந்துள்ளன. வரும் 15ம் தேதி பைனல் நடக்கிறது. பைனல் நுழைந்துள்ள 13வது நாடாகிறது குரேஷியா.

21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி துவங்கின. 32 நாடுகள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட கோப்பையை வெல்லக் கூடிய அணிகளாக கருதப்பட்ட பல முன்னணி நாடுகள் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து மற்றும் குரேஷியா ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்தன. முதல் அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என வென்று பிரான்ஸ் பைனல் நுழைந்தது. நேற்று நடந்த மற்றொரு அரை இறுதியில் இங்கிலாந்தை 2-1 என வென்று குரேஷியா பைனல் நுழைந்தது.

குரேஷியா முதல் முறையாக பைனல் நுழைந்துள்ளது. பிரான்ஸ் 1998 சாம்பியன் பட்டத்தை வென்றது. 2006ல் இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது முறையாக பைனல் நுழைந்துள்ளது.

ஜெர்மனி சாதனை

ஜெர்மனி சாதனை

இதுவரை 12 அணிகள் மட்டுமே பைனலில் விளையாடியுள்ளன. நடப்பு சாம்பியனான ஜெர்மனி அதிகபட்சமாக 8 முறையும், பிரேசில் 7 முறையும் விளையாடியுள்ளன. இத்தாலி 6 முறை, அர்ஜென்டினா 5 முறை பைனலில் விளையாடியுள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் 13வது நாடாக குரேஷியா இணைந்துள்ளது.

பிரேசில் சாதனை

பிரேசில் சாதனை

பைனலில் விளையாடி பிரேசில் 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 2 முறை 2-வது இடம் பிடித்தது. ஜெர்மனி 4 முறை சாம்பியன், 4 முறை 2-வது இடத்தைப் பிடித்தது. இத்தாலி 4 முறை சாம்பியன், 2 முறை 2வது இடம் பிடித்தது. அர்ஜென்டினா 2 முறை சாம்பியன், 3 முறை 2-வது இடத்தைப் பிடித்தது. உருகுவே 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

முன்னாள் சாம்பியன்கள்

முன்னாள் சாம்பியன்கள்

பிரான்ஸ் ஒருமுறை சாம்பியன், ஒரு முறை 2-வது இடம் பிடித்தது. இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றன. இதில் பிரான்ஸ் இந்த உலகக் கோப்பை பைனலில் விளையாட உள்ளன. குரேஷியா முதல் முறையாக பைனல் நுழைந்துள்ளது.

கோப்பையை வென்றதில்லை

கோப்பையை வென்றதில்லை

நெதர்லாந்து 3, ஹங்கேரி, செகஸ்லோவாகியா தலா 2 முறை, ஸ்வீடன் ஒரு முறை பைனலில் விளையாடி இரண்டாவது இடத்தைப் பிடித்தன. ஆனால் கோப்பையை வென்றதில்லை. முதல் முறையாக கோப்பையை வெல்ல குரேஷியா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்ல பிரான்ஸ் துடிக்கின்றன. 15ம் தேதி யார் சாம்பியன் என்பது தெரியவரும்.

Story first published: Thursday, July 12, 2018, 9:47 [IST]
Other articles published on Jul 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+