Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குரோஷிய கால்பந்தாட்ட வீரர்களின் நிர்வாண புகைப்படம் அம்பலம்

Croatia soccer players nude photos leaked in media
ரியோடி ஜெனிரோ: ஆடைகளை அவிழ்த்துப்போட்டுவிட்டு, அம்மணமாக குளித்துக்கொண்டிருந்த குரோஷிய வீரர்களின் புகைப்படங்களை அந்த நாட்டு பத்திரிகை பிரசுரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மீடியாக்களை சந்திப்பதில்லை என்று அந்த அணி வீரர்கள் முடிவெடுத்துள்ளனர்.

கடந்த 12ம்தேதி நடைபெற்ற உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில், பிரேசில் மற்றும் குரோஷிய அணிகள் மோதின. அதில் படுதோல்வியடைந்த விரக்தியில் இருந்த குரோஷிய வீரர்கள் தங்களது, சோகத்தை மறக்க, தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு சென்று சுடு தண்ணீர் நிரப்பப்பட்ட 'டப்'பில் படுத்து ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது குரோஷிய நாட்டை சேர்ந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் சிலர், வீரர்களை மறைந்திருந்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர். இதையடுத்து குரோஷிய பத்திரிகையொன்றில், அந்த போட்டோக்கள் 'அப்படியே' வெளியாகிவிட்டன. பத்திரிகையில் டிஜன் லொவ்ரன் மற்றும் வெட்ரன் கோர்லுகா ஆகிய வீரர்கள் படங்கள்தான் கண்ணை கூச செய்யும் அளவுக்கு காணப்படுகின்றன.

இதுகுறித்து கோபத்துடன், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அணியின் பயிற்சியாளர் நிகோ கோவக், "உங்களை யாராவது நிர்வாரணமாக போட்டோ எடுத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். வீரர்கள் (குரோஷியா) கோபத்திலுள்ளனர். அவர்கள் உங்களை சந்தித்து பேட்டியளிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டனர். அவர்கள் நாளையோ அல்லது உலக கோப்பை போட்டிகள் முடிந்த பிறகோ எப்போது, மவுனம் கலைப்பார்கள் என்பது எனக்கு தெரியாது. பத்திரிகையாளர்கள் தொழில்முறை வல்லுனர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் எனது எண்ணத்தை பொய்ப்பித்துவிட்டீர்கள்" என்றார்.

Story first published: Tuesday, June 17, 2014, 11:13 [IST]
Other articles published on Jun 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+