Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1998ல் அரை இறுதி.... தற்போது பைனல்..... குரேஷியா - பிரான்ஸ் மீண்டும் மோதல்!

மாஸ்கோ: 21-வது ஃபிபா உலகக் கோப்பை பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன. 1998 உலகக் கோப்பையின் அரை இறுதியில் இரு அணிகளும் மோதின. அப்போது பிரான்ஸ் கோப்பையை வென்றது. அந்த வரலாற்றை குரேஷியா மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டி பைனலை எட்டியுள்ளது. வரும் 15ம் தேதி நடக்கும் பைனலில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் மற்றும் முதல் முறையாக பைனல் நுழைந்துள்ள குரேஷியாவும் மோத உள்ளன.

croatia will not forget 1998 world cup

யுகோஸ்லாவியாவில் இருந்து 1991ல் தனி நாடானது குரேஷியா,. 1998ல் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடியது. தற்போது 5வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது.

தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே அரை இறுதி நுழைந்து அசத்தியது குரேஷியா. லீக் சுற்றில் ஜமைக்காவை 3-1, ஜப்பானை 1-0 என வென்றது. அர்ஜென்டினாவிடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் ருமேனியாவை 1-0 என வென்றது. காலிறுதியில் ஜெர்மனியை 3-0 என வென்று அசத்தியது. அரை இறுதியில் பிரான்ஸ் அணியிடம் 2-1 என தோல்வியடைந்து வெளியேறியது. நெதர்லாந்தை வென்று 3-வது இடத்தைப் பிடித்தது.

தற்போது நடக்கும் உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில்கூட தோல்வியடையாமல் பைனல் நுழைந்துள்ளது குரேஷியா. முதல் முறையாக பைனல் நுழைந்துள்ளது. பிரான்ஸ் 1998 சாம்பியன் பட்டத்தை வென்றது. 2006ல் இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது முறையாக பைனல் நுழைந்துள்ளது.

1998ல் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த குரேஷியா, இந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வென்றது. அந்த உலகக் கோப்பையின் அரை இறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. தற்போது வரலாற்றை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, July 12, 2018, 15:00 [IST]
Other articles published on Jul 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+