Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜென்டினா செய்யத் தவறியது... குரேஷியா செய்து காட்டியது.... நைஜீரியாவை வென்றது!

காலினின்கார்டு: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் டி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஐஸ்லாந்துக்கு எதிராக அர்ஜென்டினா டிரா செய்தது. அதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. டி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியுடன் அர்ஜென்டீனா 1-1 என டிரா செய்தது. அந்தப் பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது.

Croatia wins against nigeria in the fifa world cup

----
பிரிவு டி
குரேஷியா - நைஜீரியா
2 - 0
----
டி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா 1-1 என சுவிட்சர்லாந்துக்கு எதிராக டிரா செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி கோல் ஏதும் அடிக்கவில்லை.

அதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நைஜீரியாவுடன் குரேஷியா மோதியது. 1998ல் மூன்றாவது இடத்தைப் பிடித்த குரேஷியா, கடந்த உலகக் கோப்பையில் பிரிவுச் சுற்றிலேயே வெளியேறியது. இந்த உலகக் கோப்பையில் மிகவும் சீனியர் வீரர்கள் அதிகம் கொண்ட நாடாக குரேஷியா உள்ளது. அதே நேரத்தில் இளம் வீரர்களை கொண்ட நாடாக நைஜீரியா உள்ளது.

இதுவரை காலிறுதி சுற்றுக்கு கூட நுழையாத நைஜீரியாவின் இளம் வீரர்களே குரேஷியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

இன்று நடந்த ஆட்டத்தில் முதலில் இருந்தே குரேஷியா ஆதிக்கம் செலுத்தியது. கிட்டத்தட்ட போட்டியின் 55 சதவீதம் பந்து அந்த அணியிடமே இருந்தது. அதே நேரத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் போட்டியிட்டன. ஆனால் குரேஷியா கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டது.

ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் நைஜீரியாவின் எடிபோ சேம் சைடு கோலடிக்க, குரேஷியாவுக்கு முதல் கோல் கிடைத்து. முதல் பாதியில் 1-0 என குரேஷியா முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் குரேஷியாவின் மோட்ரிக் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தார்.

இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் குரேஷியா வென்றது. இதன் மூலம் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Story first published: Sunday, June 17, 2018, 2:34 [IST]
Other articles published on Jun 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+