Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப சந்தோசம்.. கடைசி நிமிஷத்தில் பசங்க கலக்கிட்டாங்க,, மகிழ்ச்சியில் லீட்ஸ் தலைவர் டேனியல்

லீட்ஸ் : லீட்ஸ் கால்பந்து அணியின் தலைவரான டேனியல் ஃபார்க், சாம்பியன்ஷிப் தொடரின் எதிரணியான பிளைமவுத் அணிக்கு எதிராக 4-1 என கூடுதல் நேரத்தில் பெற்ற வெற்றிக்காக தனது அணியைப் பாராட்டினார்.

மாற்று வீரர்களான ஜார்ஜினியோ ரட்டர் மற்றும் கிரிசென்சியோ சம்மர்வில்லின் கூடுதல் நேர கோல்கள் மற்றும் ரியான் ஹார்டியின் ஒரு போட்டி கோல்களின் மூலம், FA கோப்பையில் லீட்ஸ் அணி கடைசி 16 அணிகளுக்கான சுற்றில் நுழைந்தது. இதன் மூலம் ஆஸ்டன் வில்லா அல்லது செல்சியாவுக்கு அந்த அணி செல்லக் கூடும்.

Daniel Farke hails ‘dominant’ Leeds after extra-time win over Plymouth

இது பற்றி டேனியல் ஃபார்க் பேசுகையில், "இது ஏறக்குறைய சரியான ஆட்டமாக இருந்தது. நாங்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தினோம். நாங்கள் பல வாய்ப்புகளை உருவாக்கினோம், கோல்களை அடித்தோம், ஆனால் நாங்கள் இரண்டு முறை கிராஸ்பாரையும் போஸ்டையும் அடித்தோம். ஸ்கோர்லைன் எங்களைப் புகழ்ந்தது. ஆம், ஆனால் நாங்கள் 120 நிமிடங்கள் விளையாட வேண்டியிருந்தது மட்டுமல்ல, ஒரு ரீப்ளேவும் ஆட வேண்டி இருந்தது.' என்றார்.

மேலும், "நான் முதலில் பிளைமவுத், அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அது ஒரு துணிச்சலான அணி. அவர்கள் எப்போது வீழ்த்தப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. நாங்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்கள் இரண்டு ஆட்டங்களிலும் கதவில் கால் வைக்க (போட்டியில் மீண்டு வர) ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். இரண்டாம் பாதியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம், எங்களிடம் பந்து 82 சதவிகிதம் இருந்தது என்ற புள்ளிவிவரத்தைப் பார்த்தேன். ஆனால் பிளைமவுத் ப்ரீ-கிக்கைக் கொண்டிருந்தது, மேலும் அவர்கள் அதில் கோல் அடிக்க முடிந்தது. அதனால் அவர்கள் மிகவும் திறம்பட செயல்பட்டனர்" என்றார்.

"பிளைமவுத் ஒன்றுமில்லாமல் ஒரு கோல் அடித்தது. ஆனால் நாங்கள் இதை வெல்ல மிகுந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம். நாங்கள் விளையாட்டில் அதிக ஆற்றலையும் மனநிலையையும் முதலீடு செய்து வெற்றி பெறுவதற்கான உண்மையான விருப்பத்தைக் காட்டினோம். நாங்கள் ரிஸ்க் அடுத்து அவற்றை சரியாக பயன்படுத்தி, ஒழுக்கத்துடன் வெற்றி பெற்றோம். நாங்கள் எல்லாவற்றையும் கொடுத்து வென்றதால் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார் டேனியல் ஃபார்க்.

Story first published: Thursday, February 8, 2024, 15:07 [IST]
Other articles published on Feb 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+