
சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் சி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பெருவும், டென்மார்க் அணியும் மோத உள்ளன.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. சி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா மோதுகின்றன. இந்தப் பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் பெரு, டென்மார்க் விளையாட உள்ளன.
----
பிரிவு சி
டென்மார்க் - பெரு
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
பெரு அணி, கடைசியாக 1982ல் உலகக் கோப்பையில் விளையாடி பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. தற்போது 36 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது.
இந்த உலகக் கோப்பை பெரு கேப்டன் பாவ்லோ குரேரோவுக்கு மறக்க முடியாத ஒன்றாகும். உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக தடை விதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தடை நீங்கி இந்த உலகக் கோப்பையில் அவர் பங்கேற்கிறார்.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல, மிகப் பெரிய வெற்றி வரலாறோ, உலகப் புகழ்பெற்ற வீரர்களோ டென்மார்க் அணியில் இல்லை. 1998ல் காலிறுதியை எட்டிய அந்த அணி 2010ல் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. கடந்த ஆணஅ"உ பல்வேறு முக்கிய போட்டிகளில் டென்மார்க் அசத்தியுள்ளது.
சி பிரிவில் இருந்து பிரான்ஸ் அடுத்தச் சுற்றுக்கு கண்டிப்பாக முன்னேறும். இந்தப் பிரிவில் இருந்து முன்னேறக் கூடிய இரண்டாவது அணிக்கான வாய்ப்பை பெறுவதற்கு இன்றைய ஆட்டம் பெரு மற்றும் டென்மார்க் அணிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.