Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - 16க்கு தேறுமா டென்மார்க்!

சென்னை:21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Denmark has to prove their weight in the fifa world cup

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.

நாடு : டென்மார்க்

சி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெரு அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 16ல் பெரு
ஜூன் 21ல் ஆஸ்திரேலியா
ஜூன் 26ல் பிரான்ஸ்

ஃபிபா தரவரிசை : 12

கடைசியாக பங்கேற்ற உலகக் கோப்பை : 2010 (பிரிவு சுற்றில் வெளியேறியது)

உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1998ல் காலிறுதி

முக்கிய வீரர்கள் : கிறிஸ்டியான் எரிக்சன், காஸ்பர் ஸ்கிமிச்சைல், நிகோலாய் ஜோர்கென்சன்

கோச் : ஏஜ் ஹெரிடே

உலகக் கோப்பையில் பங்கேற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல, மிகப் பெரிய வெற்றி வரலாறோ, உலகப் புகழ்பெற்ற வீரர்களோ டென்மார்க் அணியில் இல்லை.

ஆனால், அவர்களுக்கு ஹெரிடே என்ற சிறந்த கோச் கிடைத்துள்ளார். இதற்கு முன் இருந்த கோச்களிடம் இருந்து இவர் வேறுபட்டவர். முன்பு இருந்த டென்மார்க் அணிகளைப் போல் அதிரடியாக விளையாடாமல், வெற்றிகளைப் பெறக் கூடிய அணியாக ஹெரிடே மாற்றி உள்ளார்.

2017ம் ஆண்டு பல்வேறு போட்டிகளில் டென்மார்க் அணி இதை நிரூபித்துள்ளது. 2010 உலகக் கோப்பையின்போது 18 வயது சிறுவனாக விளையாடிய கிறிஸ்டியான் எரிக்சன், தற்போது மிகவும் சிறந்த வீரர் என்ற பெயருடன் களமிறங்குகிறார்.

அவருடன் மேலும் சில நல்ல வீரர்களும் அணியில் உள்ளனர். தடுப்பாட்டத்தில் டென்மார்க் கொஞ்சம் சொதப்பும் என்பதால் கோல் கீப்பர் காஸ்பர் ஸ்கிமிச்சைல் உஷாராக இருக்க வேண்டும்.

பிரான்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பெரு அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினால், காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.

Story first published: Tuesday, June 12, 2018, 14:07 [IST]
Other articles published on Jun 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+