Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கானல் நீரா அடுத்தச் சுற்று... ஆஸ்திரேலியாவுக்கு போதாத காலம்.... டென்மார்க்கை வெல்லுமா!

Denmark to meet australia in the fifa world cup

சமாரா: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் சி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டென்மார்க்கை சந்திக்கிறது ஆஸ்திரேலியா.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் விளையாடுகின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. சி பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் டென்மார்க், ஆஸ்திரேலியா விளையாடுகின்றன.
----
பிரிவு சி
டென்மார்க் - ஆஸ்திரேலியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 5.30 மணி
----
சி பிரிவில் இதுவரை...

* பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது.
* டென்மார்க் 1-0 என பெருவை வென்றது

சி பிரிவின் புள்ளிப் பட்டியலில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. ஆஸ்திரேலியா, பெரு புள்ளி ஏதும் பெறவில்லை.
-----
ஆஸ்திரேலியாவுக்கு விளையாட்டில் கடந்த வாரம் பலத்த அடி விழுந்தது. ஒருபுறம் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வி அடைந்தது. மற்றொரு புறம் ரக்பி என, கடந்த வாரம் விளையாடிய அனைத்து விளையாட்டுகளிலும் அடி அடி மேல் விழுந்தது. ஃபிபா உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸிடம் 2-1 என தோல்வி அடைந்தது.

சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா மோதின. முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிவரை நுழைந்தது. ஆஸ்திரேலியா 2006ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேறியதே அதன் சிறப்பான ஆட்டமாகும். கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது

இந்த முறை கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக பிரான்ஸ் உள்ளது. அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடும் சவால் விடுத்ததால், ஆஸ்திரேலியா தெம்புடன் உள்ளது.

உலகக் கோப்பையில் பங்கேற்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல, மிகப் பெரிய வெற்றி வரலாறோ, உலகப் புகழ்பெற்ற வீரர்களோ டென்மார்க் அணியில் இல்லை. 1998ல் காலிறுதியை எட்டிய அந்த அணி 2010ல் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு பல்வேறு முக்கிய போட்டிகளில் டென்மார்க் அசத்தியுள்ளது.

பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் துவக்கம் முதல் கடைசி வரை பெரு அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் டென்மார்க்கின் போல்சென் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.

இன்று நடக்கும் ஆட்டத்தில் டென்மார்க்குடன் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. பெருவை வென்ற தெம்புடன் டென்மார்க் உள்ளது. பிரான்ஸ்க்கு கடும் சவால் கொடுத்த தெம்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.

Story first published: Thursday, June 21, 2018, 9:49 [IST]
Other articles published on Jun 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+