Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

115 நிமிடங்கள் மொக்கை போட்டன.... ஷூட்அவுட்டில் பரபரப்பு... 3-2 என டென்மார்க்கை வென்றது குரேஷியா!

நிஷ்னி நவ்கோராட்: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் முதல் 5 நிமிடத்துக்குள் தலா ஒரு கோல் அடித்து தூள் கிளப்பிய டென்மார்க் மற்றும் குரேஷியா, அதன்பிறகு 115 நிமிடங்களுக்கு மொக்கை போட்டன. கடைசியில் ஷூட் அவுட்டில் 3-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது குரேஷியா.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அர்ஜென்டினாவை 4-3 என வென்று பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகலை 2-1 என வென்று உருகுவே முன்னேறியது. இன்று நடந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் 4-3 என ஸ்பெயினை வென்று காலிறுதி நுழைந்தது ரஷ்யா. இந்த நிலையில் டென்மார்க் மற்றும் குரேஷியா மற்றொரு ஆட்டத்தில் விளையாடின.

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா மூன்று ஆட்டங்களிலும் வென்றது. நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. சி பிரிவில் இடம் பெற்றிருந்த டென்மார்க் ஒரு வெற்றி, 2 டிரா பெற்றது. பெருவை 1-0 என வென்றது. ஆஸ்திரேலியாவுடன் 1-1, பிரான்ஸ் உடன் 0-0 என டிரா செய்தது.

காலிறுதிக்கு நுழைவது யார்

காலிறுதிக்கு நுழைவது யார்

ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்று நான்காவது முறையாக டென்மார்க் நாக் அவுட் முன்னேறியுள்ளது. இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியது. 1998ல் காலிறுதியில் அது விளையாடியது. குரேஷியாவும் ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. 1998ல் அரை இறுதி நுழைந்த குரேஷியா இரண்டாவது முறையாக காலிறுதிக்கு நுழையும் முயற்சியுடன் களமிறங்கியது.

தலா ஒரு கோல்

தலா ஒரு கோல்

இன்று நடந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே டென்மார்க்கின் மதியாஸ் ஜோர்கன்சென் கோலடித்தார். 4வது நிமிடத்தில் குரேஷியாவின் மரியோ மண்ட்ஸ்க் கோலடித்து 1-1 என சமநிலையை உருவாக்கினார். பெனால்டி வாய்ப்பை தரக்கூடாது என இரு அணிகளும் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் விளையாடின. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

முன்னேறியது குரேஷியா

முன்னேறியது குரேஷியா

அதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. அதையடுத்து ஷூட்அவுட் வாய்ப்பு தரப்பட்டது. அதில் இரு அணிகளுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தின. முதல் வாய்ப்பை இரு அணிகளும் தவறவிட்டன. குரேஷியாவின் சார்பில் ஆண்ட்ரஜ் கிராம்னிக், லூகா மோட்ரிக், இவான் ரகிடிக் கோலடித்தனர். டென்மார்க்கின் சிமோன் ஜேயர், மைக்கேல் கிரோன் டெஸ்லி கோலடித்தனர். குரேஷியாவின் பாடேஜி, பிவாரிக் ஆகியோர் கோலடிக்கத் தவறினர். அதேபோல் டென்மார்க்கின் எரிக்சென், ஸ்கோன், ஜோர்கன்சன் ஆகியோர் கோலாக்கத் தவறினர். இதனால் 3-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது குரேஷியா.

Story first published: Monday, July 2, 2018, 2:45 [IST]
Other articles published on Jul 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+