உலக கோப்பை நாயகன் மரடோனா... மூளையில் இரத்த உறைவு... அறுவை சிகிச்சை!
பியூனோஸ் அயர்ஸ் : மூளையில் ஏற்பட்டுள்ள இரத்த உறைவு காரணமாக முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரடோனாவிற்கு ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு மூளையில் இரத்த உறைவு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் இரண்டொரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மரடோனாவிற்கு அறுவை சிகிச்சை
மூளையில் ஏற்பட்டுள்ள இரத்த உறைவு காரணமாக முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரர் டீகோ மரடோனாவிற்கு நேற்றைய தினம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டொரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையில் இரத்த உறைவு கண்டுபிடிப்பு
கடந்த திங்கட்கிழமை வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து பியூனோஸ் அயர்சில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவருக்கு மூளையில் இரத்த உறைவு இருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்கள் அறிவிப்பு
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது நிலை மேம்பட்டுள்ளதாகவும், அவர் இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மரடோனா தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பிரார்த்தனை
இரண்டு ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டுள்ள மரடோனா இருமுறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஈரல் பாதிப்பாலும் சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் மருத்துவமனை வாசலில் பேனர்களுடன் குழுமியிருந்தனர்.


Click it and Unblock the Notifications