Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடி வாங்கி பெனால்டி கோல்-ஐ தடுத்த நாய்.. சிரித்த மக்கள்.. யாராவது அந்த நாய்க்கு இரக்கப்பட்டீங்களா?

சென்னை : கால்பந்து போட்டி ஒன்றில் நாய் ஒன்று பெனால்டி கோலை தடுத்துள்ளது. அதே சமயம் அந்த நாய்க்கு அடி பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கால்பந்து உள்ளிட்ட மைதானத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அடிக்கடி நாம் நாய், பூனை மற்றும் பறவைகள் குறுக்கிடுவதை பார்த்து இருக்க முடியும்.

அப்படி ஒரு நாய் சரியாக பெனால்டி கோல் அடிக்க முற்படும் போது குறுக்கிட்டு அடி வாங்கியுள்ளது.

தயார் நிலையில் அணிகள்

தயார் நிலையில் அணிகள்

யூட்யூபில் வெளியான ஒரு கால்பந்து வீடியோவில், நாய் கோல்-ஐ தடுத்த இந்த காட்சி பதிவாகி உள்ளது. அதில் இடம் பெற்றுள்ள காட்சியில், கால்பந்து போட்டி ஒன்றில் பெனால்ட்டி ஷாட்-க்காக இரு அணிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

மைதானத்தின் உள்ளே வந்த நாய்

மைதானத்தின் உள்ளே வந்த நாய்

ஷாட் அடிக்க வேண்டிய வீரர் தன்னை தயார் செய்து கொண்டிருக்க, கோல் கீப்பர் பந்தை தடுக்க தயாராக, ரெப்ரீ விசிலை அடித்தார். சரியாக இந்த நேரத்தில் கோல் போஸ்ட் பின்புறம் இருந்து ஒரு குட்டை வகை நாய் கோல் போஸ்ட் அருகே உலாத்திக் கொண்டு இருந்தது.

கோலை அடி வாங்கி தடுத்த நாய்

கோலை அடி வாங்கி தடுத்த நாய்

பெனால்டி ஷாட்டை சரியாக எதிரணி வீரர் அடிக்க, கோல் கீப்பர் பந்து வந்த திசைக்கு எதிர் திசையில் இருந்தார். அதே சமயம் இந்த நாய் கோல் போஸ்ட்டுக்கு முன்னே சென்றது. பந்து சரியாக அந்த நாய் மீது பட்டது. இதனால், கோல் தடுக்கப்பட்டது. அடிபட்ட அந்த நாய் கத்திக் கொண்டே ஓடி விட்டது.

நாயை பார்த்து சிரித்த மக்கள்

நாயை பார்த்து சிரித்த மக்கள்

அந்த நாய் கோலை தடுத்த உடன் கூடி இருந்தவர்கள் வெடித்துச் சிரிக்கத் துவங்கினர். நிச்சயம் அந்த நாய் கோலை தடுத்தது நகைப்புக்குரிய காட்சி தான். அதே சமயம், அந்த நாய் கடும் வலியையும், வேதனையையும் அடைந்திருக்கும் என்பதும் உண்மை. அதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

அந்த நாய்க்கு அடிபட்டிருக்குமே

இந்த வீடியோ பதிவின் கீழே "இதில் சிரிக்க ஒன்றும் இல்லை. அந்த நாய் பாவம்" என்பதை சிலர் குறிப்பிட்டு உள்ளனர். அதற்கு இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவர், "அந்த நாய் தான் இப்போது ஹீரோ. உங்களுக்கு அது புரியவில்லை" என குறிப்பிட்டுள்ளார். அந்த நாய் ஹீரோ தான்.. ஆனால் ரொம்ப பாவம்.

Story first published: Wednesday, November 21, 2018, 10:40 [IST]
Other articles published on Nov 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+