Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்கள் அணிக்கு பிசினஸ் கிளாஸ்..பெண்கள் அணிக்கு எகானமி கிளாஸா.. பார்சிலோனா சர்ச்சை!

பார்சிலோனா : பார்சிலோனா புட்பால் கிளப்பை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆண்கள் அணிக்கும், பெண்கள் அணிக்கும் பயணத்தில் பாகுபாடு காட்டப்பட்டதாக பெண்கள் அணியின் ரசிகர் ஒருவர் எழுதிய தொடர் ட்வீட்களால், சர்ச்சை வெடித்துள்ளது.

பார்சிலோனா கிளப்பின் வீரர்கள் அமெரிக்காவுக்கு சென்ற விமான பயணத்தில், ஆண்கள் அணி பிசினஸ் கிளாஸ் எனப்படும் உயர்தர வகுப்பிலும், பெண்கள் அணி எகானமி கிளாஸ் என்ற சிக்கன வகுப்பிலும் பயணித்துள்ளனர். இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் விமான பயணத்தின் போது புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில் பெண்கள் அணி சிக்கன வகுப்பில் பயணிப்பதை கண்ட அந்த ரசிகர், இந்த சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார்.

economy class travel for barcelona women team condemned


இதில் பயணம் தொடங்கும் முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் கேப்டன்கள் உயர்தர வகுப்பில் நின்று புகைப்படம் எடுத்து அதை வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஆனால், அதன் பின் பெண்கள் அணி சிக்கன வகுப்பிற்கு சென்று பயணித்துள்ளனர். இந்த விஷயமும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு பார்சிலோனா அணி நிர்வாகம் மற்றும் ஒரு பெண் வீராங்கனை விளக்கம் அளித்துள்ளனர். அதில் முதலில் ஆண்கள் அணி மட்டுமே பயணம் செய்வதாக இருந்ததால் தனி விமானத்தில் அனைத்து உயர்தர வகுப்பு இருக்கைகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் பெண்கள் அணியும் பயணம் செய்ய இருந்ததால், அவர்களுக்கு சிக்கன வகுப்பில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வித்தியாசத்தை ஈடுகட்டும் வகையில் பெண்கள் அணியில், ஒவ்வொருவருக்கும் இரண்டில் இருந்து மூன்று இருக்கைகள் வரை ஒதுக்கியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தை ஏற்காத அந்த ரசிகர், ஒரு வேளை இருக்கைகள் பற்றாக்குறையாக இருந்தால், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் முன்னணி வீரர்களை உயர்தர வகுப்பிலும், மற்ற வீரர்களை சிக்கன வகுப்பிலும் பயணிக்க வைத்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் இரு அணிகளுக்கும் சரிசமமான இடமும், வசதியும் வழங்கப்படுவதாக பார்சிலோனா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Story first published: Friday, July 27, 2018, 21:53 [IST]
Other articles published on Jul 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+