Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

92 ஆண்டுகளில் முதல்முறை.. மோசமான சாதனை படைத்த கத்தார்.. முதல் போட்டியில் அசால்ட் செய்த ஈகுவடார்!

தோஹா: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வீழ்த்தியது.

ஃபிபா உலகக்கோப்பைத் தொடர் கால்பந்து தொடரின் முதல் போட்டி பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளுக்கு பின் தொடங்கியது. முதல் போட்டியில், தொடரை நடத்தும் நாடான கத்தார் அணியை எதிர்த்து ஈகுவடார் அணி விளையாடியது.

கத்தார் அணி தொடக்கம் முதலே டிஃபென்சிவ் மனநிலையில் விளையாடிய நிலையில், அதற்கு நேரெதிராக ஈகுவடார் அணி தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முதல் கோல்

முதல் கோல்

இதற்கு பலனாக ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோல், ஆஃப் சைட் என்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16வது நிமிடத்தில் ஈகுவடார் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி, ஈகுவடார் அணியின் அனுபவ வீரர் வெலன்சியா முதல் கோலை அடித்து அசத்தினார்.

ஈகுவடார் ஆதிக்கம்

ஈகுவடார் ஆதிக்கம்

இதன்பின்னர் ஈகுவடார் அணியின் ஆக்ரோஷம் அடுத்தக்கட்டத்தை எட்டியது. இதன் மூலம் 31வது நிமிடத்தில் கெசைடோ அடித்த கிராஸை, வெலன்சியா ஹெட்டர் மூலம் கோலாக்கினார். இதனை தடுக்க கத்தார் அணி கோல் கீப்பருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் கத்தார் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனையும் கத்தார் அணியின் அலி மிஸ் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கணக்கில் ஈகுவடார் அணி முன்னிலை பெற்றது.

ஈகுவடார் வெற்றி

ஈகுவடார் வெற்றி

இரண்டாம் பாதி ஆட்டம் தொடக்கம் முதலே ஈகுவடார் அணி கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாடியது. இருந்தும் கத்தார் அணியின் கோல்கீப்பரின் திறமையால் இரு கோல்கள் தடுக்கப்பட்டது. அவ்வப்போது கத்தார் அணி கோல் அடிக்க முயற்சி மேற்கொண்டாலும், ஏதும் பலனளிக்கவில்லை. இறுதியாக இரண்டாம் பாதி ஆட்ட நேர முடிவில் மேலும் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடார் அணி வெற்றிபெற்றது.

கத்தாரின் மோசமான சாதனை

கத்தாரின் மோசமான சாதனை

அதுமட்டுமல்லாமல் தொடரை நடத்தும் நாடு முதல் போட்டியில் கோல் அடிக்காமலேயே தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு ரஷ்யா 5-0 என்று சவுதி அரேபியாவை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டு கத்தார் கோல் அடிக்காமலேயே தோல்வியை சந்தித்துள்ளது. 92 ஆண்டுகளில் தொடரை நடத்திய நாட்டின் அணி, முதல் போட்டியில் தோல்வியடைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 20, 2022, 23:52 [IST]
Other articles published on Nov 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+