Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"காத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதடி" டிராவில் முடிந்த அமெரிக்கா - இங்கிலாந்து ஆட்டம்!

தோஹா: அமெரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோல் எதுவும் அடிப்படாமல் டிராவில் முடிவடைந்தது.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் குரூப் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து - அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா டிரா செய்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மறுபக்கம் இங்கிலாந்து அணி கடத போட்டியில் ஈரான் அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால், இன்றைய போட்டியில் பெரிய வெற்றியை ஈட்டும் என்று எதிரிபார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பிரேசில் அணியை போல், இங்கிலாந்து அணியின் பெஞ்ச் வலிமை அதிகமாக உள்ளது.

முதல் பாதி ஆட்டம்

முதல் பாதி ஆட்டம்

இதனால் ஈரான் அணியை போல் அமெரிக்காவையும் இங்கிலாந்து வீழ்த்தும் என்றே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து ஆட்டம் தொடங்கியது முதலே ஈரான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியா இது என்று அதிர்ச்சியை ஏற்படுத்துவது போல் களத்தில் செயல்பட்டு வந்தது. ஆனாம் அமெரிக்கா அணியோ, இங்கிலாந்து வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

அடுத்தடுத்து கார்னர் வாய்ப்புகள்

அடுத்தடுத்து கார்னர் வாய்ப்புகள்

தொடர்ந்து இரண்டாம் பாதி தொடக்கம் முதலே அமெரிக்கா அணி கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தது. இதன் பலனாக அடுத்தடுத்த நிமிடங்களில் கார்னர் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வந்தது. அதேபோல் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை அமெரிக்காவின் மெக்கன்னி இருமுறை தவறவிட்டார். 75 நிமிடங்கள் கடந்தும் ஆட்டத்தில் கோல் அடிக்கப்படாததால், போட்டி பரபரப்பாகியது.

 இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி

தொடர்ந்து ஹெண்டர்சன், ராஷ்போர்டு உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து அணியில் இணைந்த பின்னர் கோல் அடிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கடைசி வரை கோல்கள் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து கூடுதல் நேரமாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் இங்கிலாந்து அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்கவில்லை.

டிராவில் முடிந்த ஆட்டம்

டிராவில் முடிந்த ஆட்டம்

இறுதிவரை எந்த கோல்களும் அடிக்கப்படாமல் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியுடன் உலகக்கோப்பைத் தொடரின் 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இருந்தும் அமெரிக்கா ரசிகர்கள், தங்கள் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்துடன் டிராவை செய்ததை வரவேற்று உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Story first published: Saturday, November 26, 2022, 2:43 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+