For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"யாரோ ஃபார்மில் இல்லைனு சொன்னாங்க" கோல் மழை பொழிந்த இங்கிலாந்து.. ஈடுகொடுக்க முடியாமல் தவித்த ஈரான்!

தோஹா: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 2வது லீக் ஆட்டத்தில் ஈரான் அணியை 6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கத்திலேயே ஈரான் அணி தேசிய கீதத்தை புறக்கணித்ததால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் இங்கிலாந்து அணி 4-2-3-1 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியது. மறுபக்கம் ஈரான் அணி 5-4-1 என்ற ஃபார்மேஷனில் களமிறங்கியது.

19 வயது வீரர் அடித்த முதல் கோல்

19 வயது வீரர் அடித்த முதல் கோல்

இதன்பின்னர் ஆட்டம் தொடங்கியது சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அட்டாக் செய்ய தொடங்கியது. அப்போது இங்கிலாந்து அணி கோல் அடிக்க முயற்சித்த போது, ஈரானியன் கோல் கீப்பை அலிரேஸா மூக்கில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக களத்திற்கு மாற்று கோல்கீப்பர் கொண்டு வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 35வது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணியின் 19வது வயதான ஜூட் பெல்லிம்கம் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்திற்கு சென்றது.

இங்கிலாந்து அணி ஆதிக்கம்

இங்கிலாந்து அணி ஆதிக்கம்

இதற்கு ஈரான் அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்த்த அடுத்த சில நிமிடங்களில், இங்கிலாந்து அணி அடுத்த பாய்ச்சலை செயல்படுத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் சாகா 43வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனிடையே முதல் பாதி ஆட்டம் நிறைவை எட்டிய நிலையில், யாரும் யோசித்து பார்க்காத போது ஸ்டெர்லிங் அடுத்த கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 3-0 என்று கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

2வது கோல் அடித்த சாகா

2வது கோல் அடித்த சாகா

இதன்பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி தொடர்ந்து அட்டாக் செய்தது. இதன் பலனாக 62வது நிமிடத்தில் சாகா மீண்டும் கோல் அடித்து அசத்தினார். இங்கிலாந்து அணி 4-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில்,ஈரான் அணி ஒரு கோலாவது அடிக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஈரான் அணியின் தரேமி 65வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் 4-1 என்ற நிலை வந்தது.

கோல் மழை

கோல் மழை

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், மாற்று வீரர்கள் களமிறககப்பட்டனர். அதற்கு பலனாக இங்கிலாந்து அணியின் மார்கஸ் ராஷ்போர்டு 73வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பின்னர் தன் பங்கிற்கு ஜாக் கிரீலிஷ் ஒரு கோலை அடிக்க 6-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

கடைசி நிமிட பெனால்டி

கடைசி நிமிட பெனால்டி

தொடர்ந்து இரண்டாம் பாதி கூடுதல் நிமிடத்தில் ஈரான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் ஈரான் அணியின் முதல் கோலை அடித்த தரேமி கூலாக கோல் அடித்து அசத்தினார். இறுதியாக இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

14 ஃபவுல்கள்

14 ஃபவுல்கள்

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களிடையே 796 முறையும், ஈரான் வீரர்களிடையே 214 முறையும் பந்து பாஸ் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 79 சதவிகிதம் பந்தை இங்கிலாந்து வீரர்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஈரான் அணி 14 ஃபவுல்கள் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஃபார்ம் பற்றி கேள்வி

ஃபார்ம் பற்றி கேள்வி

உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஃபார்மில் இல்லை என்று அதிகளவிலான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. அதனால்பயிற்சியாளர் சவுத்கேட் அதிக அழுத்தத்தில் இருந்தார். ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளம் வீரர்கள் முதல் போட்டியில் பதிலடி கொடுத்துள்ளனர்.

Story first published: Monday, November 21, 2022, 21:15 [IST]
Other articles published on Nov 21, 2022
English summary
England beat Iran 6-2 in the 2nd league match of the FIFA World Cup football Tournament
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+