Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து எதிராக 1-0 என வெற்றி... ஹாட்ரிக் வெற்றி பெற்றது பெல்ஜியம்!

காலினின்கிராட்: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஜி பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் சந்தித்தன. ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதிபெற்றுள்ள நிலையில் 1-0 என வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது பெல்ஜியம்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க், டி பிரிவில் இருந்து குரேஷியா, அர்ஜென்டினா, இ பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து, எப் பிரிவில் இருந்து ஸ்வீடன், மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, எச் பிரிவில் இருந்து கொலம்பியா, ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் துனீஷியா, பனாமாவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் மோதின.

வெற்றியுடன் துவங்கியது

வெற்றியுடன் துவங்கியது

ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் துனீஷியாவை 5-2 என பெல்ஜியம் வென்றது. இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது. இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் இரண்டு ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

யாருக்கு முதலிடம்

யாருக்கு முதலிடம்

தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அடுத்தச் சுற்றுக்கு இரண்டு அணிகளும் முன்னேறியுள்ளன. துனீஷியா மற்றும் பனாமா இரண்டு தோல்விகளை சந்தித்து பிரிவுச் சுற்றுடன் வெளியேறுகின்றன. முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற போட்டியில் இங்கிலாந்து, பெல்ஜியம் இருந்தன.

யாருக்கு சாதகம்

யாருக்கு சாதகம்

முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, 1966ல் கோப்பையை வென்றது. அதன்பிறகு அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த உலகக் கோப்பையில் பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. 11வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம் கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்தது. உலகக் கோப்பையில் இதுவரை இரு அணிகளும் விளையாடிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் இங்கிலாந்து வென்றது. மற்றொன்று டிராவானது.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

இந்த உலகக் கோப்பையில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகின்றன. இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் உருகுவே மற்றும் குரேஷியா மட்டுமே 3 லீக் ஆட்டங்களிலும் வென்றுள்ளன. அந்த வாய்ப்பு தற்போது இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்துக்கு கிடைத்தது. இன்றைய ஆட்டத்தில் 51வது நிமிடத்தில் ஜாமுஹாஜ் கோலடிக்க பெல்ஜியம் 1-0 என இங்கிலாந்தை வென்று ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

Story first published: Friday, June 29, 2018, 1:29 [IST]
Other articles published on Jun 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+