For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெனால்டியில் 4-3 என கொலம்பியாவை வென்றது.... காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் நாக் அவுட் சுற்றில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து, கொலம்பியா சந்திக்கின்றன.

மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையின் கடைசி நாக் அவுட் ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மினா கோலடிக்க 1-1 என கொலம்பியா சமநிலையை உருவாக்கியது. அதையடுத்து கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் ஏதும் அடிக்கவில்லை. கடைசியில் பெனால்டி ஷூட்அவுட்டில் 4-3 என வென்று காலிறுதிக்கு இங்கிலாந்து முன்னேறியது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும். நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன.

அர்ஜென்டினாவை வென்று பிரான்ஸ், போர்ச்சுகலை வென்று உருகுவே, ஸ்பெயினை வென்று ரஷ்யா, டென்மார்க்கை வென்று குரேஷியா, மெக்சிகோவை வென்று பிரேசில், ஜப்பானை வென்று பெல்ஜியம், சுவிட்சர்லாந்தை வென்று ஸ்வீடன் ஆகியவை ஏற்கனவே காலிறுதிக்கு நுழைந்துள்ளன.

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில்

இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது. துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. எச் பிரிவில் இடம்பெற்றிருந்த கொலம்பியா 3ல் 2ல் வெற்றி, ஒரு தோல்வி அடைந்தது. ஜப்பானிடம் 2-1 என்று தோல்வியடைந்தது. அதன்பிறகு போலந்தை 3-0, செனகலை 1-0 என வென்றது.

இங்கிலாந்தின் சாதனை

இங்கிலாந்தின் சாதனை

1966ல் உலகக் கோப்பையை வென்றுள்ள இங்கிலாந்து, இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பைகளில் நாக் அவுட் சுற்றுகளில் மிகவும் வலுவான ஐந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஜெர்மனியிடம் 1970, 1990, 2010, போர்ச்சுகல்லிடம் 2006, பிரேசிலிடம் 1962, 2002, அர்ஜென்டினாவிடம் 1986, 1998, உருகுவேயிடம் 1954ல் தோல்வியடைந்துள்ளது. மற்ற அணிகளிடம் தோல்வியடைந்ததில்லை.

காலிறுதியில் இங்கிலாந்து

காலிறுதியில் இங்கிலாந்து

இன்று நடந்த கடைசி நாக் அவுட் ஆட்டத்தில் இங்கிலாந்து, கொலம்பியா மோதின. கோல் ஏதும் இல்லாமல் முதல் பாதி முடிந்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹாரி கேன் கோலடிக்க இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்த உலகக் கோப்பையில் 6வது கோலை அடித்து, அதிக கோலடித்தோரில் முதலிடத்தில் கேன் உள்ளார். ஸ்டாப்பேஜ் நேரத்தில் கொலம்பியாவின் மினா கோலடிக்க 1-1 என ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

முனனேறியது இங்கிலாந்து

முனனேறியது இங்கிலாந்து

அதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. அதையடுத்து பெனால்டி ஷூட்அவுட் கொடுக்கப்பட்டது. இதில் 4-3 என இங்கிலாந்து வென்றது. கொலம்பியாவின் பால்கோ, குவாடிராடோ, முரேல் ஆகியோர் கோலடிக்க, யூரிப், பக்கா கோலடிக்கத் தவறினர். இங்கிலாந்தின் கேன், ரேஷ்போர்ட், டிரிப்பர், எரிக் டயர் ஆகியோர் கோலடிக்க, ஹென்டர்சன் கோலடிக்கத் தவறினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது

Story first published: Wednesday, July 4, 2018, 2:32 [IST]
Other articles published on Jul 4, 2018
English summary
England to face colombia in the knock out match of the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+