ஸ்டேடியத்துக்கு கூட்டமே வரலைன்னாலும் கோடியில் கொழிக்கும் இங்கிலாந்து கால்பந்து கிளப்கள்
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் நடக்கும் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் கால்பந்து கிளப் அணிகள், தொலைக்காட்சி உரிமைகள் மூலம் கிடைக்கும் பணத்தால் லாபத்தில் கொழிப்பது பிபிசி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2016-17 காலகட்டத்தில் நடந்த போட்டிகளின் போது மட்டும் 18 கிளப் அணிகளின் தொலைக்காட்சி வருமானமாக தோராயமாக 74,800 கோடி ரூபாய் (10.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. போட்டிகளின் போது டிக்கெட் விற்பனை மூலம் வரும் வருமானம், மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு கூட இல்லை என்ற தகவலும் வந்துள்ளது.

இதனால், டிக்கெட் முழுவதுமாக விற்பனை ஆகாமல் பாதி அரங்கத்துக்கு மட்டுமே மக்கள் இருந்தாலும், பெரும் லாபத்தில் இயங்கும் நிலையில் இருக்கின்றன இந்த கிளப்கள்.
இது தொடர்பாக டாக்டர். ராப் வில்சன், எனும் விளையாட்டு நிதிகள் தொடர்பான நிபுணர் கூறுகையில், “இது டிக்கெட் வருமானத்தை காட்டிலும், தொலைக்காட்சி வருமானத்தை நோக்கி திரும்பியதால் ஏற்பட்டது. இந்த வருமான அமைப்பு கிளப்களில் சிறப்பாக தங்கிவிட்டது. பிரீமியர் லீக் தொடரில் 120 மில்லியன் பவுண்ட்கள் (தோராயமாக 10௦௦ கோடி ரூபாய்) வருமானம் (வீரர்களுக்கு) கிடைத்தால், காலியான அரங்கத்தில் கூட விளையாடலாம்” என தெரிவித்துள்ளார்.
டிக்கெட் வாங்கி போட்டிகளை ரசிக்கும் ரசிகர்களால் இதுவரை வருமானம் பார்த்த அணிகள், தற்போது தொலைக்காட்சியை நோக்கி திரும்பி உள்ளதால் ரசிகர்களுக்கு ஆதரிக்கும் வகையில் சில குரல்களும் எழுந்துள்ளது.
கால்பந்து ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பேசிய மால்கம் கிளார்க் மக்கள் அரங்கத்தில் இல்லாமல் போனால், தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தனை வருமானம் அளிக்க முன்வருவார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். பெரிய தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் கிடைக்க காரணம், கூட்டமும், அதன் சப்தமும், எதிரணியின் ரசிகர்களும் மற்றும் இதன் சூழ்நிலைகளும் தான். வீரர்களும், பயிற்சியாளர்களும் வருவார்கள், போவார்கள். நாங்கள் அங்கேயே இருப்போம். ஒரு காலியான அரங்கத்தில் பிரீமியர் லீக் போட்டியை பார்க்க எவ்வளவு வெறுப்பாக இருக்கும்? என தன் நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த செய்திகளை அடுத்து, பிரீமியர் லீக் நிர்வாகம் ரசிகர்களை ஊக்கமளிக்கும் வகையில் தாங்கள் பல முயற்சிகளை முன்பே எடுத்து வந்துள்ளதாக கூறியுள்ளது.
Story first published: Thursday, August 16, 2018, 13:38 [IST]
Other articles published on Aug 16, 2018


Click it and Unblock the Notifications