Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பனாமாவை சூறையாடிய இங்கிலாந்து சூறாவளி.. ரொனால்டோவை மிஞ்சினார் கேன்.. நாக்அவுட் சுற்றில் இங்கிலாந்து!

England wins against panama and enters next round in the fifa world cup

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் அறிமுக அணியான பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து வெறித்தனமாக விளையாடியது. 6-1 என்ற கோல் கணக்கில் சூறையாடிய இங்கிலாந்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்த இங்கிலாந்தின் ஹாரி கேன், 5 கோல்களுடன் அதிக கோலடித்தோர் பட்டியலில் ரொனால்டோவை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்தார்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பையில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் பிரிந்து பெல்ஜியம் ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, அறிமுக அணியான பனாமாவை சந்தித்தது.
----
பிரிவு ஜி
இங்கிலாந்து - பனாமா
6 - 1
----
ஜி பிரிவில் இதுவரை...
* பெல்ஜியம் 3--0 என பனாமாவை வென்றது.
* இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது
* பெல்ஜியம் 5-2 என துனீஷியாவை வென்றது
* இங்கிலாந்து 6-1 என பனாமாவை வென்றது.
இரண்டு ஆட்டங்களில் பெற்ற வெற்றிகளுடன் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து நாக் சுற்றுக்கு முன்னேறின. இரண்டு தோல்விகளை சந்தித்த பனாமா மற்றும் துனீஷியா வெளியேறின.
-----
ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3--0 என பனாமாவை வென்று, அடுத்த சுற்றுக்கான சீட் போட்டது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. ஆட்டம் முடிவடையும் கடைசி கட்டத்தில் கோல் அடித்ததால் இங்கிலாந்து வென்றது.

நேற்று நடந்த ஆட்டத்தில் இந்த உலகக் கோப்பையிலேயே அதிக கோல்கள் விழுந்த ஆட்டமாக பெல்ஜியம் மற்றும் துனீஷியா ஆட்டம் அமைந்தது. பெல்ஜியம் 5-2 என துனீஷியாவை வென்றது

இந்த நிலையில், இன்று நடந்த ஆட்டத்தில் அறிமுக அணியான பனாமாவை இங்கிலாந்து சந்தித்தது.

உலகக் கோப்பையை இதுவரை வென்றுள்ள 8 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, 1966ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியனானது. அதன்பிறகு கோப்பையை தொட்டுவிடும் தூரத்தைக் கூட எட்டவில்லை.

துனீஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில்கூட தட்டுத்தடுமாறி கடைசி நிமிடத்தில் அடித்த கோலால் வெற்றிபெற்றது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் அதற்கெல்லாம் வேலையே வைக்கவில்லை. 8வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை அடித்தார்.

அதன்பிறகு ஏதோ கோல் அடித்து பயிற்சி செய்பவர்கள்போல, 22வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஹாரி கேன் கோலடித்தார். இதோ நானும்தான் அடிப்பேன் என 36வது நிமிடத்தில் லிங்கார்ட் அணியின் மூன்றாவது கோலடித்தார்.

யார் அடித்தக் கோலடிப்பது என்று நடந்த போட்டியில் ஸ்டோன்ஸ் 40வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தார். நான் பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் என்பதை நிரூபிக்கும் வகையில் கேன் 46வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். அதையடுத்து 5-0 என முதல் பாதியை முடித்தது இங்கிலாந்து.

இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்ந்தது. 62வது நிமிடத்தில் கேன் ஹாட்ரிக் கோலடித்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர்களில் ரொனால்டோவை பின்தள்ளி 5 கோல்களுடன் கேன் முதலிடத்தில் உள்ளார்.

ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் பாலோய் பனாமா அணியின் ஆறுதல் கோலை அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஜி பிரிவில் இருந்து பெல்ஜியத்தை தொடர்ந்து நாக் அவுட் சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த துனீஷியா மற்றும் பனாமா வெளியேறுகின்றன.

Story first published: Sunday, June 24, 2018, 19:46 [IST]
Other articles published on Jun 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+