Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வரை தண்ணி காட்டிய துனிஷியா.. திக்குமுக்காடிப் போன இங்கிலாந்து.. கடைசி நேர கோலால் வெற்றி!

Recommended Video

கடைசி நேர கோலால் இங்கிலாந்து வெற்றி!

வோல்கோகார்ட்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை வென்றது முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

England wins against Tunisia in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆடடத்தில் பெல்ஜியம் 3-0 என அறிமுக அணியான பனாமாவை வென்றது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் துனீஷியாவை 2-1 என இங்கிலாந்து வென்றது.
----
பிரிவு ஜி
இங்கிலாந்து - துனீஷியா
2 - 1
----
* உலகக் கோப்பையில் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 62 ஆட்டங்களில் 11 ஆட்டங்களில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. வேறு எந்த அணிக்கும் இல்லாத விரும்பப்படாத சாதனை இது.

* உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே இங்கிலாந்து வென்றுள்ளது. 4ல் டிரா, 3ல்தோல்வி அடைந்தது.

* 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா தனது முதல் வெற்றியை சுவைத்தது. அதன்பிறகு, இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.
--
உலகக் கோப்பையை இதுவரை வென்றுள்ள 8 நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, 1966ல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் சாம்பியனானது. அதன்பிறகு கோப்பையை தொட்டுவிடும் தூரத்தைக் கூட எட்டவில்லை.

உலகக் கோப்பையில் விளையாடும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனீஷியா, தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது. இதுவரை உலகக் கோப்பையில் 1978, 1998, 2002, 2006ல் விளையாடியது. ஆனால் முதல் பிரிவு சுற்று ஆட்டங்களிலேயே வெளியேறியது.

இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் துனீஷியாவை சந்தித்தது இங்கிலாந்து. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ஹாரி கேன் கோலடிக்க இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் துனீஷியாவின் சாசி பெனால்டி வாய்ப்பை கோலாக்கி சமநிலையை உருவாக்கினார்.

இந்த ஆட்டத்தில் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. கிட்டத்தட்ட 60 சதவீத நேரம் பந்து அந்த அணியின் வசமே இருந்தது. கோலடிக்கும் வாய்ப்பும் அந்த அணிக்கு 18 முறை கிடைத்தது.

ஆனால், கிடைத்த வாய்ப்புகளை இங்கிலாந்து சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் துனீஷியா அணியும் விடாக்கொண்டனாக இங்கிலாந்தின் கோல் முயற்சிகளை தடுத்தது.

வழக்கமான ஆட்ட நேர இறுதியில் 1-1 என சமநிலையில் இருந்தன. டிராவில் முடிவடையும் என்று நினைத்த நேரத்தில், கூடுதல் நேரத்தில் ஹாரி கேன் மற்றொரு கோலடிக்க, இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, June 19, 2018, 9:43 [IST]
Other articles published on Jun 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+