Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் சாக்கு.. மனைவி காலை வாரி விட்டு விழ வைத்த கணவர்.. செம பிளான் போல

லண்டன்: இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜேக் வில்ஷியரும் அவரது மனைவி ஆன்ட்ரியானியும் கால்பந்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இதில் என்னன்னா தனது மனைவியின் காலுக்கு நடுவே கொண்டு போய் தன் காலை விட்டு அவர் விழ வைத்து விட்டார்.

கொரோனா பீதி காரணமாக இங்கிலாந்தும் கூட முடங்கிக் கிடக்கிறது. அங்கும் அந்த வைரஸ் தனது வேலையை தீவிரமாக காட்டி வருகிறது. இந்த நிலையில் கால்பந்து வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் வீட்டோடு முடங்கிக் கிடக்கின்றனர். தனிமையில் இருந்தாலும் குடும்பத்தோடு ஏதாவது செய்தபடி உள்ளனர்.

அப்படி ஒருவர்தான் ஜேக் வில்ஷியர். இவர் இங்கிலாந்து கால்பந்து வீரர். மிட்பீல்டர். இவரும் அவரது மனைவி ஆன்ட்ரியானியும் தங்களது தோட்டத்தில் கால்பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கால்பந்து விளையாட்டு

கால்பந்து விளையாட்டு

நல்ல வெயில் நேரத்தில் இருவரும் கால்பந்து விளையாடியுள்ளனர். மைதானத்தில் செய்வது போல பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க கடுமையாக முயற்சிக்கிறார் ஜேக். மனைவிக்குத்தான் சரியாக ஆடத் தெரியவில்லை. கணவரிடமிருந்து பந்தை பிடுங்க முயற்சித்து முயற்சித்து தோல்வி அடைகிறார். வெட்கம் வேறு வந்து வந்து போகிறது.

மனைவியுடன் கால்பந்து ஆட்டம்

அவரைத் தள்ளி விட்டுப் பிடுங்கப் பார்த்தும் கூட முடியவில்லை. முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறார் ஜேக். இப்படியாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் ஆன்ட்ரியானி வசம் பந்து வருவது போல தெரிகிறது. உடனே மனைவி கால்களுக்குள் புகுந்து காலால் தட்டி விட்டு விடுகிறார் ஜேக். அப்படியே மல்லாக்க விழுந்து விடுகிறார் ஆன்ட்ரியானி. கால்பந்து போட்டியும் அத்தோடு முடிவடைகிறது.

வலுவாக உள்ள கால்கள்

வலுவாக உள்ள கால்கள்

சமீப காலமாக காயம் காரணமாக சரியாக விளையாடாமல் இருந்து வருகிறார் ஜேக். கடந்த அக்டோபர் மாதம் முதலே அவர் சரியாக ஆடவில்லை. தற்போதுதான் தேறியுள்ளார். இந்த நிலையில் மனைவியுடன் விளையாடிய கால்பந்து மூலமாக தனது கால்கள் இன்னும் வலுவாக இருப்பதை அவர் நிரூபித்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

லவ்யூ ஆன்ட்ரியானி

லவ்யூ ஆன்ட்ரியானி

கணவரும் மனைவியுமாக விளையாடிய இந்த கால்பந்து விளையாட்டு வீடியோவை ஜேக் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது. அதில் வீட்டிலேயே முடங்கியிருக்கும்போது நமது விரக்தி இப்படித்தான் வெளிப்படும். ஆனாலும் இந்த விளையாட்டு இனிமையானது.. லவ்யூ ஆன்ட்ரியானி என்று மனைவிக்கு லவ் யூ சொல்லியுள்ளார். இல்லாட்டி வீட்டுக்குள் போனதும் அடி யார் வாங்குறது?

Story first published: Thursday, April 16, 2020, 13:57 [IST]
Other articles published on Apr 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+