Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Euro Cup 2024: மனுஷனாய்யா நீங்க... ஸ்காட்லாந்தை கதற விட்ட ஜெர்மனி.. முதல் போட்டியிலேயே 5 கோல்

முனிச்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் துவக்கம் முதலே ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது. ஐந்து கோல் அடித்த ஜெர்மனி, ஸ்காட்லாந்து அணியை நான்கு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அசர வைத்தது.

ஸ்காட்லாந்து அணி முதல் பாதியிலேயே ரெட் கார்டு காரணமாக ஒரு வீரரை இழந்தது. அதனால் இரண்டாம் பாதி முழுவதும் பத்து வீரர்களை வைத்துக் கொண்டே விளையாடியது ஸ்காட்லாந்து. முதல் பாதியிலேயே ஜெர்மனி அணி மூன்று கோல் அடித்த நிலையில், இரண்டாம் பாதியில் இரண்டு கோல் அடித்து ஸ்காட்லாந்து அணியை கதறவிட்டது.

Euro cup 2024 football


இந்த போட்டியின் பத்தாவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃப்ளோரியான் விட்ஸ் முதல் கோலை அடித்தார். அடுத்து 19 வது நிமிடத்தில் ஜமால் மூஸியலா ஜெர்மனிக்கு இரண்டாவது கோலை அடித்தார். அடுத்து 44வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணியின் ரியான் போர்த்தியோஸ் ரெட் கார்டு காட்டப்பட்டு ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இன்னும் ஒரு நிமிடத்தில் முதல் பாதி முடிவடையும் என்ற நிலையில் ஜெர்மனி அணியின் கை ஹாவெர்ட்ஸ் மூன்றாவது கோலை அடித்தார். அப்போதே ஸ்காட்லாந்து அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. ரியான் ரெட் கார்டு காரணமாக வெளியேற்றப்பட்டதால் இரண்டாம் பாதி முழுவதும் பத்து வீரர்களை வைத்துக் கொண்டு திணறிய ஸ்காட்லாந்து அணி, தொடர்ந்து சொதப்பலாக ஆடியது.

ஜெர்மனி ஆக்ரோஷமாக ஆடிய நிலையில் 68வது நிமிடத்தில் அந்த அணியின் நிக்லாஸ் ஃபுல்க்ருக் நான்காவது கோலை அடித்தார். அடுத்து போட்டியின் முடிவில் 87 வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஆண்டானியோ ருடிகர் அந்த கோலை அடித்து ஆறுதல் அளித்தார்.

அதன் பின் போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தனது ஐந்தாவது கோலை அடித்தது. அந்த அணியின் எம்ரே கேன் ஐந்தாவது கோலை அடித்திருந்தார்.

இதன் மூலம் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி அபாரமான வெற்றியை பெற்றது. கடந்த 2018 மற்றும் 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடர்களில் குரூப் சுற்றுடன் ஜெர்மனி வெளியேறி ஏமாற்றம் அளித்து இருந்தது. இந்த நிலையில் ஜெர்மனியின் கால்பந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தங்கள் சொந்த நாட்டில் நடக்கும் யூரோ கோப்பை தொடரில் முதல் போட்டியிலேயே பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது ஜெர்மனி.

Story first published: Saturday, June 15, 2024, 7:41 [IST]
Other articles published on Jun 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+