Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கு இந்தியா வெற்றி.. அங்கு ஜெர்மனி வெற்றி.. யூரோ கோப்பையில் மழைக்கு நடுவே போராடி வென்ற ஜெர்மன்

முனிச்: 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற அதே நேரத்தில் யூரோ கோப்பையில் டென்மார்க்கை வென்றது ஜெர்மனி. அதன் மூலம் கால் இறுதி சுற்றுக்கு ஜெர்மனி முன்னேறி உள்ளது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 16 அணிகள் நாக் அவுட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில் ஜெர்மனி டென்மார்க் அணியை சந்தித்தது.

இந்த போட்டியில் நான்காவது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் ஸ்லாட்டர்பேக் கோல் அடித்தார். ஆனால், அவர் கோல் பாக்ஸ்க்கு உள்ளே இருந்து கோல் அடித்ததால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் 34 வது நிமிடத்தில் மைதானத்தில் மின்னல் அடித்தது. பின்னர் மழை பெய்தது. இதை அடுத்து போட்டி 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் போட்டி தொடங்கியது.

Euro cup 2024 football

முதல் பாதியில் ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 53வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் முதல் கோலை அடித்தார் ஹாவெர்ட்ஸ். அடுத்து 68வது நிமிடத்தில் ஜமால் மூஷியலா இரண்டாவது கோலை அடித்தார். இதை அடுத்து ஜெர்மனி 2 - 0 என முன்னிலை பெற்றது.

போட்டி நேரம் முடிந்த பின் ஐந்து நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக மற்றொரு ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் இத்தாலி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 30, 2024, 10:05 [IST]
Other articles published on Jun 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+