Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த கோல் போட்டு தோற்ற துருக்கி.. ஷூட் அவுட்டில் வென்ற இங்கிலாந்து.. யூரோ காலிறுதி முடிவுகள்

முனிச்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது கால் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 75வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி முதல் கோல் அடித்தது.

அடுத்து 80வது நிமிடத்தில் அதற்கு பதிலடி கொடுத்து கோல் அடித்தது இங்கிலாந்து அணி. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதை அடுத்து கூடுதல் நேரமாக முப்பது நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அதிலும், இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட கூடுதலாக அடிக்கவில்லை. இதை அடுத்து போட்டி சூட் அவுட்-க்கு சென்றது. அதில் இங்கிலாந்து 5 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு நான்காவது கால் இறுதி போட்டியில் நெதர்லாந்து

Euro cup 2024 football

நான்காவது கால் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் 35வது நிமிடத்தில் துருக்கி வீரர் அக்காய்தின் அந்த அணிக்கு முதல் கோலை அடித்தார். 55வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் குல்லர் அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வெளியே சென்றது. அதனால், எளிதாக கிடைக்க வேண்டிய கோல் வாய்ப்பு நழுவியது.

அடுத்து 70வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தது. அதன் பின் 76வது நிமிடத்தில் துருக்கி வீரர் முல்டூர் பதற்றத்தில் துருக்கியின் கோல் பகுதியிலேயே கோல் அடித்தார். இதை அடுத்து நெதர்லாந்து 2 - 1 என முன்னிலை பெற்றது. ஆட்டநேர முடிவு வரை துருக்கி அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதை அடுத்து 2 - 1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி கால் இறுதியில் வெற்றி பெற்றது. அடுத்து நடக்கவுள்ள அரை இறுதி சுற்றில், முதல் அரை இறுதியில் ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் அணிகள் மோத உள்ளன. இரண்டாவது அரை இறுதியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

Story first published: Sunday, July 7, 2024, 9:46 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+