Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Euro Cup 2024: வரலாறு படைத்த ஸ்பெயின்.. ஃபிரான்ஸ்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது..

முனிச்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.

இதன் மூலம் தொடர்ந்து யூரோ கோப்பை வரலாற்றில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற மிகப்பெரும் சாதனையை பதிவு செய்துள்ளது ஸ்பெயின். இந்த போட்டியில் ஃபிரான்ஸ் அணி 9 வது நிமிடத்திலேயே கோல் அடித்தது.

Euro cup 2024 football

கிலியன் எம்பாப்பே அடித்த பந்தை, தனது தலையால் அடித்து கோலாக மாற்றினார் கோலோ மானி. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஸ்பெயின் வரிசையாக இரண்டு கோல் அடித்து ஃபிரான்ஸ் அணியின் ஆதிக்கத்தை முறியடித்தது. 21 வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் லாமின் யாமால் முதல் கோலை அடித்தார். அவர் யூரோ கோப்பை வரலாற்றிலேயே மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் சேர்த்து செய்தார். அவரது வயது 16 வருடங்கள் 362 நாட்கள் ஆகும்.

அடுத்து 25வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டேனி ஓல்மோ தனது அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். இதை அடுத்து ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் ஆறு நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டது.

அதிலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்த நிலையில், 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி, ஃபிரான்சை வீழ்த்தி 2024 யூரோ கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

Story first published: Wednesday, July 10, 2024, 7:51 [IST]
Other articles published on Jul 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+