Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க மட்டும் தான் கோல் அடிப்போம்.. உங்களுக்கு ஒன்னு வச்சுக்கோ.. ஸ்பெயின் அலப்பறை.. ஜார்ஜியா தோல்வி

முனிச்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதிய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்பெயின் 4 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் ஜார்ஜியா சார்பில் அடிக்கப்பட்ட அந்த ஒரு கோல் ஸ்பெயின் வீரர் அடித்தது தான். அதாவது ஸ்பெயின் வீரர் தவறுதலாக ஜார்ஜியாவின் கோல் போஸ்டில் கோல் அடித்து விட்டார். ஆக மொத்தத்தில் இந்த போட்டியில் அடிக்கப்பட்ட ஐந்து கோல்களும் ஸ்பெயின் வீரர்களால் தான் அடிக்கப்பட்டது.

இந்த போட்டியின் 18 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ராபின் லே நார்மண்ட் ஜார்ஜியாவுக்கு தவறுதலாக ஒரு கோலை அடித்தார். அதன் மூலம் ஜார்ஜியா அணி அப்போது 1 - 0 என்ற அளவில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து ஜார்ஜியா வெற்றி பெற்றதை போல அந்த அணியின் ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்தனர். இந்த முன்னிலையை வைத்து ஜார்ஜியா இந்தப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதினார்கள்.

Euro cup 2024 football

ஆனால், ஸ்பெயின் அதன் பின் கோல் மழை பொழிய ஆரம்பித்தது. ஸ்பெயின் அணியின் ரோட்ரி அந்த அணிக்கு முதல் கோலை அடித்தார். அடுத்து இரண்டாவது பாதியில் ஃபேபியன் ரூஸ் இரண்டாவது கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் 75 வது நிமிடத்தில் வில்லியம்ஸ் மூன்றாவது கோல் அடித்தார். அடுத்து 83 வது நிமிடத்தில் டேனி ஓல்ட் நான்காவது கோல் அடித்தார்.

இதை அடுத்து ஸ்பெயின் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி கால் இறுதியில் ஜெர்மனியை சந்திக்க உள்ளது. ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதும் கால் இறுதிப் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

Story first published: Monday, July 1, 2024, 9:18 [IST]
Other articles published on Jul 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+