Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி கொடுத்த செக் குடியரசு.. சாதித்த ரொனால்டோ.. கடைசி நிமிடத்தில் மாறிய வெற்றி!

பெர்லின் : செக் குடியரசு அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இரு அணிகளின் வெற்றிக்கும் ஒரு கோல் தேவையாக இருந்த போது, செக் குடியரசு அணி டிஃபென்சில் செய்த தவறை பயன்படுத்தி போர்ச்சுகல் அணியின் பிரான்சிஸ்கோ அசத்தல் கோலை அடித்து கடைசி நிமிடத்தில் வெற்றிபெற வைத்தார்.

நடப்பாண்டுக்கான யூரோ கோப்பை தொடரில் குரூப் F பிரிவில் உள்ள பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து செக் குடியரசு அணி களமிறங்கியது. இரு அணிகளுக்கு இதுவே முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலமாக நட்சத்திர வீரர் ரொனால்டோ 6வது முறையாக யூரோ கோப்பையை விளையாடி சாதனை படைத்துள்ளார்.

euro cup 2024 portugal cristiano ronaldo football

இதன்பின் ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே ரொனால்டோ அடித்த ஹெட்டர் ஜஸ்ட் மிஸ்ஸில் தவறியது. முதல் பாதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் அடுத்தடுத்து வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்த போது, போர்ச்சுகல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. செக் குடியரசு அணி வீரர்கள் போர்ச்சுகல் அணியை சிறப்பாக டிஃபெண்ட் செய்தனர்.

இதன்பின் முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 2ஆம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரொனால்டோவுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செக் குடியரசின் கோல்கீப்பர் ஸ்டேனக் தடுத்து நிறுத்தினார். இதன்பின் செக் குடியரசு அணியின் லூகாஸ் பிரவோத் பாக்ஸிற்கு வெளியில் இருந்து அசாத்தியமான ஒரு கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் செக் குடியரசு அணி 1-0 என்ற முன்னிலை பெற்றது.

போர்ச்சுகள் அணி ரசிகர்கள் மிரண்டு போக, அந்த அணி வீரர்களுக்கு கோல் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது 69வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி கோல் அடிக்க வேண்டும் என்று பாக்ஸிற்கு பந்தை கொண்டு வந்த போது, செக் குடியரசு வீரர் டிஃபெண்ட் செய்கிறேன் என்று ஓன் கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. இதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. 2வது பாதியில் 4 நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டது.

அதில் 2வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணி பிரான்சிஸ்கோ கோல் அடித்து மிரட்டினார். இதன் மூலமகா போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலமாக யூரோ கோப்பையில் செக் குடியரசு அணியை 3வது முறையாக போர்ர்சுகல் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. அதேபோல் புள்ளிப்பட்டியலிலும் குரூப் F பிரிவில் 3 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, June 19, 2024, 8:52 [IST]
Other articles published on Jun 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+