Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செவில்லா சாதனை.. பரபரப்பான ஈரோப்பா லீக் இறுதியில் வெற்றி.. இன்டர் அணியை வீழ்த்தியது!

கொலோன் : 2020 ஈரோப்பா லீக் இறுதிப் போட்டியில் 3 - 2 என்ற கோல் கணக்கில் செவில்லா அணி இன்டர் மிலன்-ஐ வீழ்த்தியது.

Recommended Video

IPL 2020: Dhoni அடித்த Sixer! Whistle போட்ட Raina! | OneIndia Tamil

இன்டர் அணியின் ரோமேலு லுகாகுதொடர்ந்து தன் 11வது போட்டியில் கோல் அடித்தார். எனினும், செவில்லா அணி மூன்று கோல் அடித்து போட்டியில் வென்றது. இது ஈரோப்பா லீக்கில் செவில்லா அணியின் ஆறாவது கோப்பை ஆகும்.

Europa League 2020 : Sevilla vs Inter Milan final match result

இந்த பரபரப்பான போட்டியில் 5வது நிமிடத்தில் இன்டர் அணியின் லுகாகு கோல் அடித்தார். 12வது நிமிடத்தில் செவில்லா அணியின் டி ஜாங் கோல் அடித்து அதை சமன் செய்தார்.

33வது நிமிடத்தில் டி ஜாங் மீண்டும் ஒரு கோல் அடித்து தெறிக்க விட்டார். 36வது நிமிடத்தில் இன்டர் அணியின் டியாகோ காட்வின் கோல் அடித்து அதை சமன் செய்தார். இரண்டு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடித்ததால் போட்டியில் பரபரப்பு நீடித்தது.

64வது நிமிடத்தில் லுகாகு கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், செவில்லா கீப்பர் அந்த கோலை தடுத்து போட்டியை மாற்றினார்.

74வது நிமிடத்தில் செவில்லா அணியின் டியாகோ கார்லோஸ் தன் அணியின் மூன்றாவது கோலை அடித்தார். இன்டர் மிலன் அணியால் அதன் பின் கோல் முடியவில்லை. கடைசியாக அளிக்கப்பட கூடுதல் 6 நிமிடங்களில் இன்டர் அணிக்கு ஃப்ரீ-கிக் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

செவில்லா அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் இன்டர் அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஈரோப்பா கோப்பை வென்றது.

Story first published: Saturday, August 22, 2020, 19:33 [IST]
Other articles published on Aug 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+