Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஒன் லவ்" கலகம் செய்ய முயற்சித்த ஐரோப்பிய நாடுகள்.. ஃபிபா விடுத்த எச்சரிக்கை.. ஒரே நாளில் அந்தர் பல்டி!

தோஹா: கத்தாரில் சமபால் ஈர்ப்பாளர்களுக்கான தடைக்கு எதிராக களத்தில் ஒன் லவ் பட்டையை கைகளில் அணிந்து களமிறங்கப் போவதாக அறிவித்த ஒரே நாளில், பல்வேறு அணிகளும் பின்வாங்கியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்தாண்டு கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் தொடங்கி உள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒட்டுமொத்த உலகமே இந்த கால்பந்து உலகக் கோப்பை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கத்தாரின் கட்டுப்பாடுகள்

கத்தாரின் கட்டுப்பாடுகள்

இதனிடையே தீவிர இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான கத்தாரில் உலகக்கோப்பை ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக மதுபானம், போதைப்பொருள், உடலுறவு, ஆடைக் கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெளிநாட்டு ரசிகர்கள் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஒன் லவ் பட்டை

ஒன் லவ் பட்டை

குறிப்பாக கால்பந்து வீரர்கள் பலரும் எல்ஜிபிடி+ சமூகத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக பேசி வருகின்றனர். இதனிடையே கத்தார் அரசின் எல்ஜிபிடி+ தடைக்கு எதிராக ஜெர்மனி மற்றும் டென்மார்க் அணியின் கேப்டன்கள் கருத்து தெரிவித்தனர். அதில் உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் களமிறங்கும் போது எல்ஜிபிடி+ சமூகத்திற்கு ஆதரவாக ஒன் லவ் பட்டை அணிந்து களமிறங்க உள்ளதாக அறிவித்தனர்.

பின்வாங்கிய அணிகள்

பின்வாங்கிய அணிகள்

இதனைத் தொடர்ந்து ஃபிபா அமைப்பு சார்பாக விளையாட்டு வீரர்கள் ஒன் வல் பட்டையுடன் களமிறங்கினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இந்த நிலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஒன் லவ் பட்டை அணிந்து களமிறங்க மாட்டோம் என்று இங்கிலாந்து, வேல்ஸ்ம் பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

பல்டி அடித்த அணிகள்

பல்டி அடித்த அணிகள்

இதுகுறித்து தட்ச் கால்பந்து அமைப்பு கூறுகையில், உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கும் போது அணியின் கேப்டன் மஞ்சள் அட்டை பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் எங்கள் திட்டத்தை கைவிடுகிறோம் என்று அறிவித்துள்ளது. நேற்று எல்ஜிபிடி+ தடைக்கு எதிரான குரல் அணிகள் அனைவரும், ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்துள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Story first published: Monday, November 21, 2022, 20:30 [IST]
Other articles published on Nov 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+