For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அர்ஜென்டினாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதா ஃபிபா.. பெரிய தவறை கண்டுகொள்ளாத நடுவர்கள்.. வணிகம் காரணமா?

கத்தார் : 2022 ஆம் ஆண்டு பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக வென்று அசத்தியுள்ளது.

கடைசி உலக கோப்பையில் விளையாடிய மெஸ்ஸி சாம்பியன் பட்டத்துடன் திரும்பி இருப்பது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஐபிஎல் மினி ஏலத்தில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு..என்ன செய்யப்போறாங்களோ?? சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஐபிஎல் மினி ஏலத்தில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு..என்ன செய்யப்போறாங்களோ??

பெனால்டி ஷூட் அவுட்

பெனால்டி ஷூட் அவுட்

எனினும் நட்சத்திர வீரர்கள் பென்ஸ்மா, போக் பா ஆகியோர் இல்லாமல் களமிறங்கிய பிரான்சில் கெலியான் எம்பாப்பே மட்டும் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் ஆட்டம் மூன்றுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் முடிந்த நிலையில், பெனால்டி ஷூட் வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

அர்ஜென்டினாவுக்கு சாதகம்

அர்ஜென்டினாவுக்கு சாதகம்

இதனிடையே நடப்பு உலக கோப்பையில் வீரர்கள் ஒரு கோலை போட்டார்கள் என்றால் அந்த கோலை பலமுறை ஆய்வு செய்த பிறகு தான் நடுவர்கள் கோலை வழங்குவார்கள். இந்த நடைமுறையை அனைத்து போட்டிகளிலும் நடுவர்கள் மேற்கொண்டனர். ஆனால் இறுதிப் போட்டியில் ஒருதலை பட்சமாக நடுவர்கள் அர்ஜென்டினாவுக்கு சாதகமாகவே செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

விதிகள் மீறப்பட்டதா?

விதிகள் மீறப்பட்டதா?

போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய அர்ஜென்டினாவின் மூன்றாவது கோலில் அர்ஜென்டினா விதிகளை மீறியதாக தற்போது புகார் வந்துள்ளது. அதாவது ஆட்டத்தின் 108 வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். ஏற்கனவே பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் தடுத்து, Rebound ஆன பந்தை மெஸ்ஸி அருகில் வந்து கோல் போட்டார். ஆனால் அப்போது களத்திற்கு வெளியே இருந்த இரண்டு அர்ஜென்டினா வீரர்கள் களத்திற்குள் வந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஒரு கோல் அடிக்கும் போது களத்தில் கோல்கீப்பரை சேர்த்து 11 வீரர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். ஆனால் மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோல் போடும் போது உற்சாகம் மிகுதியில் வெளியே இருந்த அர்ஜென்டினா வீரர் ஒருவர் களத்திற்குள் வந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தெரிந்தும் நடுவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அர்ஜெண்டினா வெல்ல வேண்டும் என்று நோக்கத்தில் போட்டியை பிபா நடத்தியதாக புகார் கூறப்படுகிறது.

பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

இதேபோன்று நெதர்லாந்துக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக அப்போது புகார் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பையை வென்றால் பிபாவுக்கு ஸ்பான்சர் செய்துள்ள அனைத்து பொருட்களின் சந்தை மதிப்பும் கடுமையாக உயரும் என்பதற்காக இப்படி நடந்து கொண்டதா என்ற ரசிகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஏனெனில் மெஸ்ஸிக்கு ஸ்பான்சர் செய்துள்ள அனைத்து பொருட்களின் சந்தை மதிப்பும் அவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரம் விளையாட்டில் தலையிடுகிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Tuesday, December 20, 2022, 16:09 [IST]
Other articles published on Dec 20, 2022
English summary
Fans lashes out fifa for allowing messi 2nd goal in final vs france அர்ஜென்டினாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதா ஃபிபா.. பெரிய தவறை கண்டுகொள்ளாத நடுவர்கள்.. வணிகம் காரணமா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X