எப்சி புனே சிட்டியின் தலைமை கோச் பதவி விலகினார்!
புனே: இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் விளையாடும் எப்சி புனே சிட்டி கால்பந்து அணியின் தலைமை கோச் பொறுப்பில் இருந்து ராங்கோ போபோவிக் விலகினார்.
கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போல், கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் நடக்கின்றன.

இதில் வாத்வான் குழுமம் மற்றும் நடிகர் அர்ஜூன் கபூர் ஆகியோர் உரிமையாளர்களாக உள்ள எப்சி புனே சிட்டி அணியும் பங்கேற்கிறது.
கடந்த, 2014ல் இருந்து நான்கு தலைமை கோச்களை பார்த்த புனே சிட்டி அணியின் கோச்சாக கடந்தாண்டு செப்டம்பரில் செர்பியாவின் ராங்கோ போபோவிக் பொறுப்பேற்றார்.
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சீசனில், புனே சிட்டி அணி, முதல் முறையாக அரை இறுதி வரை நுழைந்தது.
இந்த நிலையில், தலைமை கோச் பதவியில் இருந்து போபோவிக் விலகியுள்ளார். இதை எப்சி புனே அணி அறிவித்துள்ளது.
Story first published: Wednesday, May 30, 2018, 18:05 [IST]
Other articles published on May 30, 2018


Click it and Unblock the Notifications