For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பதவி விலகிய போர்ச்சுகல் பயிற்சியாளர் சாண்டோஸ்.. ரொனால்டோ ரசிகர்கள் ஹேப்பி.. புதிய பயிற்சியாளர் யார்?

தோஹா: போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பெர்னாண்டோ சான்டோஸ் விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களில் உலகக்கோப்பை வெல்லப் போகும் அணி யார் என்பது தெரிந்துவிடும். இதனால் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இன்னொரு பக்கம் உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியடைந்து வெளியேறிய அணிகளில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. உலகக்கோப்பைத் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

எப்போதும் உணர்வுகள் மறக்காது.. கால்பந்து விளையாட்டின் GOAT ரொனால்டோ தான்.. விராட் கோலி நெகிழ்ச்சி! எப்போதும் உணர்வுகள் மறக்காது.. கால்பந்து விளையாட்டின் GOAT ரொனால்டோ தான்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

சாண்டோஸ் பதவி விலகல்

சாண்டோஸ் பதவி விலகல்

ஏற்கனவே பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட், பெல்ஜியம் பயிற்சியாளர் ராபர்டோ மார்ட்டினஸ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இந்த நிலையில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் பதவி விலகியுள்ளார். உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில், மொரோக்கோ அணிக்கு எதிராக போர்ச்சுக்கல் தோல்வியடைந்தது.

ரொனால்டோ சர்ச்சை

ரொனால்டோ சர்ச்சை

அதேபோல் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தென் கொரியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோவை வெளியே அமரவைத்து போர்ச்சுகல் அணியை ஆடவைத்தார் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். அந்த போட்டியின் போதே ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மொராக்கோவுடன் தோல்வி

மொராக்கோவுடன் தோல்வி

குறிப்பாக மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட ரொனால்டோ ஆட்டத்தின் 45வது நிமிடத்தில்தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார். இருந்தும் போர்ச்சுகல் அணி தோல்வியையே சந்தித்தது. ஆனால் ரொனால்டோ களமிறங்கிய நேரத்தில் கோல் அடிப்பதற்கான இருந்தது.

புதிய பயிற்சியாளர் யார்?

புதிய பயிற்சியாளர் யார்?

இதனால் போர்ச்சுகல் அணியின் தோல்விக்கு ரொனால்டோவை களமிறக்காததே காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பெர்னாண்டஸ் சாண்டோஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே போர்ச்சுகல் அணியின் அடுத்த பயிற்சியாளராக ஜோஸ் முரினோ வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Saturday, December 17, 2022, 0:34 [IST]
Other articles published on Dec 17, 2022
English summary
Fernando Santos has stepped down as Portugal coach. Following this, the expectation of who will become the new coach has increased among the fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X