ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குட்டி நாடு சிலி
ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சிலி எளிதாக வெற்றி கண்டது.
உலக கோப்பை கால்பந்து போட்டித்தொடரில் நேற்று 3 போட்டிகள் நடைபெற்றன. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென் அமெரிக்க நாடான சிலியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 12வது நிமிடத்தில், சிலி வீரர் அலெக்சிஸ் சன்செஸ், 14வது நிமிடத்தில் ஜார்ஜ் வல்டிவியா அடுத்தடுத்து கோல்களை போட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சிவைத்தியம் கொடுத்தனர்.
ஆஸ்திரேலியாவும் விடுவதாக இல்லை. 35வது நிமிடத்தில் அந்த அணியின் டிம்கேல் கோல்போட்டு சிலிக்கு பதிலடி கொடுத்தார். ஆட்டம் முடியும் தருவாயில் சிலியின் ஜியன் பியாஜோர் மேலும் ஒரு கோல் போட, ஆட்ட நேர இறுதியில் சிலி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
Story first published: Saturday, June 14, 2014, 12:30 [IST]
Other articles published on Jun 14, 2014


Click it and Unblock the Notifications