Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: சர்ச்சையான கடைசி கோல்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த செனகல்.. பெல்ஜியம் போராடி வெற்றி

சியாட்டில்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் பரபரப்பான ஆட்டத்தில், ஒரு கட்டத்தில் 2-0 என பின்தங்கியிருந்த பெல்ஜியம் அணி, முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் செனகலை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. கூடுதல் நேரத்தில் கிடைத்த சர்ச்சைக்குரிய பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி பெல்ஜியம் இந்த வெற்றியைப் பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே செனகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில், சாடியோ மானே கொடுத்த கிராஸை இஸ்மைலா சார் ஹெட்டர் செய்ய, அது கம்பத்தில் பட்டு மீண்ட பந்தை ஹபீப் தியாரா கோலாக மாற்றி செனகலுக்கு 1-0 என முன்னிலை தந்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில், மூசா நியாகாடே கொடுத்த நீண்ட பாஸை பயன்படுத்தி இஸ்மைலா சார் ஒரு அற்புதமான கோல் அடித்து செனகலை 2-0 என பலமான நிலைக்குக் கொண்டு சென்றார். இதனால் ஆட்டத்தின் 80-வது நிமிடம் வரை செனகல் அணியே ஆதிக்கம் செலுத்தியது.

FIFA Belgium achieves Stunning 3-2 Comeback Victory Against Senegal After Trailing 2-0

பெல்ஜிய மேலாளர் ரூடி கார்சியா மாற்று ஆட்டக்காரராக களம் இறக்கிய ரொமேலு லுகாகு, ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதன் பிறகு 89-வது நிமிடத்தில் லியாண்ட்ரோ டிராஸார்ட் கொடுத்த பாஸை பயன்படுத்தி யூரி டைலமன்ஸ் ஒரு ஹெட்டர் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடங்களில் (125-வது நிமிடம்) டைலமன்ஸ் பந்தை கடத்த முயன்றபோது, செனகலின் லமைன் காமாரா அவரை தடுத்ததாகக் கூறி விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பின் பெல்ஜியத்திற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை டைலமன்ஸ் கோலாக மாற்றி பெல்ஜியத்தின் 3-2 என்ற த்ரில் வெற்றியை உறுதி செய்தார். இந்த முடிவுக்கு செனகல் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்தப் போட்டியில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.

FIFA WC: ஜாம்பவான் பீலேயின் சாதனையை முறியடித்த ஹாரி கேன்.. காங்கோவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!

FIFA WC: ஜாம்பவான் பீலேயின் சாதனையை முறியடித்த ஹாரி கேன்.. காங்கோவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!

இந்த அசாத்திய வெற்றியின் மூலம் பெல்ஜியம் அணி அடுத்த சுற்றில் அமெரிக்கா மற்றும் போஸ்னியா இடையேயான போட்டியில் வெல்லும் அணியை ஜூலை 6 அன்று எதிர்கொள்ளவுள்ளது.

Story first published: Thursday, July 2, 2026, 7:36 [IST]
Other articles published on Jul 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+