Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: ஈரானுக்கு எதிராக தடுமாறிய பெல்ஜியம்.. 'ரெட் கார்டு' வாங்கிய வீரரால் ஆட்டம் டிரா

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஜி பிரிவில் நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில், நட்சத்திர வீரர்களைக் கொண்ட பெல்ஜியம் அணியை 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்து ஈரான் அணி அதிர்ச்சி அளித்துள்ளது. இப்போட்டியில் பெல்ஜியம் வீரர் நாதன் ங்கோய் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். அதனால் 10 வீரர்களுடன் ஆடிய பெல்ஜியம் டிரா மட்டுமே செய்தது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் கெவின் டி புருய்னே, ரொமேலு லுகாகு போன்ற முன்னணி வீரர்கள் இருந்தும் பெல்ஜியம் அணியால் ஈரானின் பலமான தற்காப்பு அரணை உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் பெரும்பகுதி நேர பந்தை பெல்ஜியம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், சிறந்த வாய்ப்புகள் ஈரானுக்கே கிடைத்தன. முதல் பாதியில் ஈரானின் நட்சத்திர வீரர் மெஹ்தி தாரெமி அடித்த அபாரமான கோல், 'வார்' தொழில்நுட்ப சோதனையில் ஆஃப்சைடு என நடுவரால் நிராகரிக்கப்பட்டது. இதனால் முதல் பாதி கோலின்றி முடிந்தது.

FIFA Belgium Held to a 0-0 Draw by Iran After Nathan Ngoy Red Card in World Cup 2026 Match

இரண்டாவது பாதியில் பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் நாதன் ங்கோய், கோல்கீப்பர் திபாத் கோர்டிஸ் நோக்கி மெதுவாக தட்டிவிட்ட பந்தை தாரெமி பறிக்க முயன்றார். அவரை நாதன் கையை நீட்டி தடுத்து கீழே தள்ளியதால், நடுவர் அவருக்கு உடனடியாக சிவப்பு அட்டை காட்டி மைதானத்தில் இருந்து வெளியேற்றினார். இதனால் பெல்ஜியம் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. எனினும், கோல்கீப்பர் கோர்டிஸின் சிறப்பான செயல்பாட்டால் ஈரானின் கோல் முயற்சிகள் தடுக்கப்பட்டன. இந்தப் போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 0-0 என்ற கணக்கில் டிராவில் ஆட்டத்தை முடித்தன.

FIFA WC: வரலாறு படைத்த கேப் வெர்டே.. முன்னாள் சாம்பியன் உருகுவேயை 2-2 என சமன் செய்து அசத்தல்

FIFA WC: வரலாறு படைத்த கேப் வெர்டே.. முன்னாள் சாம்பியன் உருகுவேயை 2-2 என சமன் செய்து அசத்தல்

குரூப் ஜி பிரிவில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளுமே டிராவில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2 புள்ளிகளுடன் உள்ள பெல்ஜியம் தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தையும், ஈரான் அணி எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளன. இதற்கிடையில், ஈரானில் உள்ள கடுமையான ஆட்சிக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஈரான் நாட்டினர் மைதானத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Story first published: Monday, June 22, 2026, 7:48 [IST]
Other articles published on Jun 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+