Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜென்டினா வீரர்களுக்கு தடை விதிக்க பிபா தீவிர விசாரணை.. உலகக் கோப்பை இறுதிப்போட்டி மோதலால் சிக்கல்

நியூயார்க்: 2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனால் அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டி முடிந்தவுடன், தோல்வியின் விரக்தியில் அர்ஜென்டினா வீரர்கள் ஸ்பெயின் வீரர்களுடன் மைதானத்தில் கடுமையாக சண்டை போட்டனர்.

FIFA investigates Argentina players following 2026 World Cup Final Brawl With Spain

அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர் காவியை கீழே தள்ளி எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்தார். நஹுயல் மோலினா, ரோட்ரியைத் தாக்க முயன்றார். மற்றொரு அர்ஜென்டினா வீரர் நிகோலஸ் ஓட்டமெண்டி ஸ்பெயின் வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அர்ஜென்டினாவின் உதவி பயிற்சியாளர் ராபர்டோ அயாலாவும் இந்த மோதலில் ஈடுபட்டார்.

இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிபாவின் ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைகள் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. போட்டியின் வீடியோ பதிவுகள் மற்றும் நடுவர்களின் அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிபா ஒழுங்குமுறை விதி எண் 14-ன் படி, மைதானத்தில் வன்முறையில் ஈடுபடும் வீரர்களுக்குக் குறைந்தது 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். இதனால் அர்ஜென்டினாவின் முக்கிய வீரர்களுக்கு அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வீரர்களுக்கு மட்டுமின்றி, அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கும் பிபா பெரிய அளவில் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வென்ற பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய பதாகையை ஏந்தி கொண்டாடினார்கள். "மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவுக்கே சொந்தம்" என்ற பல ஆண்டு சர்ச்சையை வெளிக் கொண்டு வந்து இங்கிலாந்து அணியை சீண்டி இருந்தார்கள்.

“டம்மி டீமுடன் ஜெயித்து விட்டு, தோல்வியை மறைத்து தன் பதவியை..” கம்பீரை வறுத்தெடுத்த ஸ்ரீகாந்த்

“டம்மி டீமுடன் ஜெயித்து விட்டு, தோல்வியை மறைத்து தன் பதவியை..” கம்பீரை வறுத்தெடுத்த ஸ்ரீகாந்த்

1982-ல் நடைபெற்ற ஃபாக்லாந்து போரை நினைவுபடுத்தும் வகையில் இதை செய்து இருந்தார்கள். அந்தச் செயலுக்காக அர்ஜென்டினா ஏற்கனவே பிபாவின் கண்காணிப்பில் இருந்த நிலையில், தற்போது இறுதிப் போட்டியில் நடைபெற்ற வன்முறை அந்த அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

“ரோஹித் - கம்பீர் கேமரா முன் ஒன்றாக சிரித்தார்கள் ஆனால்..”.. வீடியோ குறித்து அஸ்வின் அதிரடி விளக்கம்

“ரோஹித் - கம்பீர் கேமரா முன் ஒன்றாக சிரித்தார்கள் ஆனால்..”.. வீடியோ குறித்து அஸ்வின் அதிரடி விளக்கம்
Story first published: Tuesday, July 21, 2026, 10:55 [IST]
Other articles published on Jul 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+