Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: மெக்சிகோ அணிக்கு ஹாட்ரிக் வெற்றி.. 6வது உலகக் கோப்பையில் விளையாடி ஓச்சோவா சாதனை

மெக்சிகோ சிட்டி: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த மெக்சிகோ, லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது.

மெக்சிகோவின் புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் மெக்சிகோ அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் மேடியோ சாவேஸ் முதல் கோல் அடித்து அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார்.

FIFA Mexico Tops Group A with Hat-trick of Wins Legend Guillermo Ochoa Makes History in 6th World Cup

தொடர்ந்து 61வது நிமிடத்தில் ஜூலியன் குய்னோனஸ் இரண்டாவது கோலை அடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அல்வாரோ ஃபிடால்கோ 3வது கோலை அடித்து 3-0 என்ற கணக்கில் மெக்சிகோவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தப் போட்டியில் மெக்சிகோ அணி பல வரலாற்று மைல்கல் சாதனைகளை செய்தது. ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் இறங்கிய மெக்சிகோ கோல்கீப்பர் கில்லர்மோ ஓச்சோவா, உலகக் கோப்பை வரலாற்றில் தனது 6வது உலகக் கோப்பை தொடரில் விளையாடி புதிய சாதனை படைத்தார். 40 வயதான ஓச்சோவா, இதன் மூலம் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோரின் சாதனையைச் சமன் செய்தார். இவரது லாங் கிக் மூலமாகவே மெக்சிகோவின் 3வது கோல் சாத்தியமானது.

மற்றொருபுறம், மெக்சிகோவின் 17 வயது இளம் மிட்பீல்டர் கில்பெர்டோ மோரா, உலகக் கோப்பையில் தொடக்க வீரராகக் களம் இறங்கியதன் மூலம், கடந்த 24 ஆண்டுகளில் உலகக் கோப்பையில் களம் இறங்கிய மிக இளைய வீரர் (17 வயது 101 நாட்கள்) என்ற சாதனையைப் படைத்தார். ஆட்டத்தின் 2வது கோலுக்கு இவரே முக்கியக் காரணமாக இருந்தார்.

FIFA WC: வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா.. தென் கொரியாவை 1-0 என வீழ்த்தி சாதனை வெற்றி

FIFA WC: வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா.. தென் கொரியாவை 1-0 என வீழ்த்தி சாதனை வெற்றி

செக் குடியரசு அணியின் தோமஸ் சௌசெக் முழங்கால் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். குரூப் ஏ பிரிவில் 9 புள்ளிகளுடன் மெக்சிகோ முதலிடத்தைப் பிடிக்க, மற்றொரு போட்டியில் தென்கொரியாவை 1-0 என வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

“வைபவ் சூர்யவன்ஷி இந்திய வீரர்கள் அறைக்குள் நுழைய தடை”.. இங்கிலாந்தில் ஐசிசி விதித்த கட்டுப்பாடு

“வைபவ் சூர்யவன்ஷி இந்திய வீரர்கள் அறைக்குள் நுழைய தடை”.. இங்கிலாந்தில் ஐசிசி விதித்த கட்டுப்பாடு
Story first published: Thursday, June 25, 2026, 11:10 [IST]
Other articles published on Jun 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+