'கடி மன்னன்' சுவாரசுக்கு விதித்த தடையை தளர்த்த முடியாது: ஃபிஃபா திட்டவட்டம்
ரியோடி ஜெனிரோ: உருகுவே கால்பந்தாட்ட வீரர் கடி மன்னன் லூயிஸ் சுவாரசுக்கு விதிக்கப்பட்ட நான்கு மாத சஸ்பெண்ட் தண்டனையை குறைக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபா மறுத்துவிட்டது. இதனால் சுவாரஸ் இனிமேல் அக்டோபர் மாதத்தில்தான் கால்பந்து மைதானங்களில் கால் வைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.நறுக் கடி
உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் டி குரூப்பில் நடைபெற்ற போட்டியின்போது இத்தாலியின் ஜார்ஜியோ சியேலினியை கடித்ததாக உருகுவே நட்சத்திர ஆட்டக்காரர் லூயிஸ்சுவாரசுக்கு, கால்பந்து போட்டிகளில் விளையாட 4 மாதம் தடை விதித்தது ஃபிஃபா.

உருகுவே அதிபர் கடுப்பு
இந்த தடையை உருகுவே அணி நிர்வாகமும், அரசும் எதிர்த்துள்ளன. உருகுவே அதிபர், விமான நிலையத்துக்கு வந்திருந்து சுவாரசுக்கு வரவேற்பு கொடுத்து நாட்டுக்குள் அழைத்துச் சென்று ஃபிஃபாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.

மன்னிப்பு கேட்ட சுவாரஸ்
இந்நிலையில், உருகுவே அணி நிர்வாகமும், சுவாரசும், தண்டனை குறைப்புக்காக ஃபிஃபாவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். மேலும் கடித்ததற்காக சுவாரஸ் மன்னிப்பும் கேட்டுக்கொண்டிருந்தார். கடிபட்ட வீரரும், சுவாரசுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் அதிகம்தான் என்று ஆதங்கம் வெளியிட்டார்.

கோரிக்கை நிராகரிப்பு
ஆனால் சுவாரசின் கோரிக்கையை ஏற்க ஃபிஃபா மறுத்துவிட்டது. ரியோடிஜெனிரோவில் நிருபர்களிடம் பேசிய அவ்வமைப்பின் நிர்வாகி டீலியா பிஸ்கர் "உருகுவே கால்பந்தாட்ட அமைப்பும், சுவாரசும் விடுத்த வேண்டுகோளை நிராகரிப்பது என்று ஃபிஃபா முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

மூன்று முறை கடித்தவர்
இதுகுறித்து ஃபிஃபா வட்டாரங்கள் தெரிவிக்கையில், சுவாரஸ் பிற வீரர்களை கடிப்பது இது மூன்றாவது முறை. அப்படியிருந்தும், உடனடியாக அவர் மன்னிப்பு கேட்கவில்லை. போட்டித்தொடரில் இருந்து வெளியேற்றிய பிறகுதான் கடித்த வீரரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவேதான், ஃபிஃபா இவரது கோரிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications