Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: உருகுவேவின் 29 கோல் முயற்சிகள் முறியடிப்பு.. சவுதி அரேபியா கோல்கீப்பர் அல் உவைஸ் அசத்தல்

மியாமி: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் எச் பிரிவின் லீக் ஆட்டத்தில், உருகுவே அணியின் அசுரத்தனமான கோல் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திய சவுதி அரேபியா 1-1 என்ற கணக்கில் டிரா செய்து அசத்தியது. அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முன்னாள் சாம்பியனான உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதலே உருகுவே அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் சவுதி அரேபியா அணி முதல் கோல் அடித்து அதிர்ச்சியளித்தது. சவுதியின் முசாப் அல்ஜுவைர் வீசிய கார்னர் பந்தை முகமது கன்னோ தலையால் முட்ட, அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்தார். ஆனால், அங்கு வந்த அப்துல்லா அல்அம்ரி ரீபவுண்ட் பந்தை லாவகமாக கோலாக மாற்றி சவுதியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

FIFA Saudi Arabia Holds Uruguay to Thrilling 1-1 Draw as Mohammed Al-Owais Saves the Day

இரண்டாவது பாதியில் உருகுவே அணி ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக அதிகரித்தது. சவுதி அரேபியாவின் கோல் எல்லைக்குள் தொடர்ந்து பந்துகளைப் பறக்கவிட்டனர். ஆனால், சவுதி கோல்கீப்பர் முகமது அல் உவைஸ் நேற்று சுவராக நின்று உருகுவேயின் அனைத்து கோல் முயற்சிகளையும் முறியடித்தார். உருகுவே அணி மொத்தம் 29 முறை கோல் அடிக்க முயற்சித்தது, இதில் 11 ஷாட்டுகள் ஆன்-டார்கெட்டில் இருந்தன. மேலும் அவர்களுக்கு 14 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன. 60வது நிமிடத்தில் உருகுவேயின் மானுவல் உகார்டே அடித்த பந்து துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.

தொடர் அழுத்தத்தின் பலனாக 80வது நிமிடத்தில் உருகுவே ஆட்டத்தை சமன் செய்தது. பிலாஸ் தலையால் முட்டிய பந்தை அல் உவைஸ் தடுத்த போதிலும், அங்கு வந்த மேக்ஸி அராயுகோ பந்தை லாவகமாக கோல் போஸ்ட்டிற்குள் தள்ளி 1-1 என சமன் செய்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் வால்வெர்டே மற்றும் ஜிமினெஸ் அடித்த பந்துகளையும் அல் உவைஸ் தடுத்துக் காப்பாற்றினார்.

FIFA: எகிப்து அணியை தவிக்கவிட்ட பெல்ஜியம்.. சொந்த கோலால் ஆட்டம் 1-1 என ஆட்டம் டிரா

FIFA: எகிப்து அணியை தவிக்கவிட்ட பெல்ஜியம்.. சொந்த கோலால் ஆட்டம் 1-1 என ஆட்டம் டிரா

இறுதிவரை இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. உருகுவே அணிக்கு இந்த டிரா ஏமாற்றத்தை அளித்தாலும், தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட சவுதி அரேபியாவுக்கு 1 புள்ளி கிடைத்தது.

Story first published: Tuesday, June 16, 2026, 7:57 [IST]
Other articles published on Jun 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+