Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை கால்பந்து: அடித்துக்கொள்ளும் வீரர்கள்.. வேடிக்கை பார்க்கும் நடுவர்கள்..

ரியோடி ஜெனிரோ: வீரர்கள் அடித்துக் கொள்வதை கண்டுகொள்ளாமல் நடுவர்கள் செயல்படுவதாக உலக கோப்பையில் பங்கேற்றுள்ள நடுவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரேசில் வீரர் நெய்மர் அடிபட்டு போட்டித்தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் இந்த பிரச்சினை சூடு பிடித்துள்ளது.

சொற்பம்தான்..

சொற்பம்தான்..

கடந்த சனிக்கிழமை அதிகாலை பிரேசிலுக்கும், கொலம்பியாவுக்கும் நடுவே நடைபெற்ற காலிறுதி போட்டியின்போது, வீரர்கள் மோதிக்கொள்வதும், முறைத்துக்கொள்வதும் மொத்தம் 54 முறை நடந்துள்ளது. ஆனால், நடுவர் மொத்தமே 3 பேருக்குதான் மஞ்சள் அட்டையை காண்பித்துள்ளார். மஞ்சள் அட்டை எனப்படுவது எச்சரிக்கை செய்யவும், அடுத்த போட்டியில் அந்த வீரர் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்கும் வைத்துள்ளது.

உக்கிர தாக்குதல்

உக்கிர தாக்குதல்

அன்றைய போட்டியில் முதல் 64 நிமிடங்களில் எந்த ஒரு வீரருக்கும் நடுவர் மஞ்சள் அட்டை காண்பிக்கவில்லை. இதன் காரணமாக வீரர்கள் மோதிக்கொள்வது உக்கிரமானது. இந்த தாக்குதலின் ஒரு பகுதியாகத்தான் 88வது நிமிடத்தில் நெய்மர் தாக்கப்பட்டு முதுகெலும்பு உடைக்கப்பட்டது.

இந்த கோப்பையில் மிக குறைவு

இந்த கோப்பையில் மிக குறைவு

கடந்த வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில், ஒரு போட்டிக்கு 2.86 என்ற சராசரியில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது. இது 1986ம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக குறைந்த சதவிகிதமாகும். இந்த உலக கோப்பை போட்டித்தொடரில் இதுவரை நடுவர்கள் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்பதற்கு இந்த சதவிகித கணக்கே நல்ல உதாரணமாகும்.

இவர்களுக்கு மட்டுமே தண்டனை

இவர்களுக்கு மட்டுமே தண்டனை

பிரேசில்-கொலம்பியா போட்டியின்போது பிரேசில் கேப்டன் டி.சில்வா, கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ், ஜுவான் ஜுனிகா ஆகியோர் மஞ்சள் அட்டை பெற்றனர். இதில் மூன்றாவது நபர்தான், நெய்மரின் முதுகெலும்பை உடைத்தவராகும்.

ஸ்பெயின் நடுவர்

ஸ்பெயின் நடுவர்

இந்த சர்ச்சைகளுக்கு காரணமான நடுவர், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த, கார்லஸ் வெலாஸ்கோ. நெய்மர் முதுகெலும்பு உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஃபிஃபா முடிவு செய்துள்ளது.

Story first published: Monday, July 7, 2014, 15:59 [IST]
Other articles published on Jul 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+