உலகக் கோப்பை கால்பந்து நாக்அவுட் சுற்று நாளை துவங்குகிறது
டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. நாளை முதல் இரண்டாவது சுற்று நாக்-அவுட் போட்டிகள் நடக்கின்றன.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்தியா உள்பட 24 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது.

நேற்று இரவு நடந்த முதல் சுற்றின் ஆட்டங்களில் இ பிரிவில் பிரான்ஸ் 5-1 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை வென்றது. ஜப்பான் - நியூ காலடோனியா இடையேயான ஆட்டம் 1-1 என டிராவானது. எப். பிரிவில் இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வென்றது. மெக்சிகோ - சிலி இடையேயான ஆட்டம் கோல் ஏதும் அடிக்காமல் டிராவில் முடிந்தது.
அடுத்ததாக இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. அதற்கான கால அட்டவணை:
அக். 16
போட்டி எண் 37 கொலம்பியா - ஜெர்மனி
போட்டி எண் 38 பராகுவே -அமெரிக்கா
அக். 17
போட்டி எண் 39 ஈரான் - மெக்சிகோ
போட்டி எண் 40 பிரான்ஸ் - ஸ்பெயின்
போட்டி எண் 41 இங்கிலாந்து - ஜப்பான்
போட்டி எண் 43 மாலி - ஈராக்
அக். 18
போட்டி எண் 42 கானா -நைஜர்
போட்டி எண் 44 பிரேசில் -ஹோண்டுராஸ்
Story first published: Sunday, October 15, 2017, 14:04 [IST]
Other articles published on Oct 15, 2017


Click it and Unblock the Notifications